Total Pageviews

Sunday, March 12, 2017

கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 6





அல்லது இந்த லிங்கிலும் பாடல் கேட்கலாம்

https://ia800406.us.archive.org/10/items/KandakottamDeivaManiMaalaiVI/Kandakottam_Deiva_mani_maalai_VI.ogg




உழல்உற்ற உழவுமுதல் உறுதொழில் இயற்றிமலம் ஒத்தபல பொருள்ஈட்டிவீண் உறுவயிறு நிறையவெண் சோறடைத் திவ்வுடலை ஒதிபோல் வளர்த்துநாளும் விழல்உற்ற வாழ்க்கையை விரும்பினேன் ஐயஇவ் வெய்யஉடல் பொய்என்கிலேன் வெளிமயக் கோமாய விடமயக் கோஎனது விதிமயக் கோஅறிகிலேன் கழல்உற்ற நின்துணைக் கால்மலர் வணங்கிநின் கருணையை விழைந்துகொண்டெம் களைகணே ஈராறு கண்கொண்ட என்றன்இரு கண்ணேஎ னப்புகழ்கிலேன் தழைவுற்ற சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே.

வானம்எங் கேஅமுத பானம்எங்கே அமரர் வாழ்க்கைஅபி மானம்எங்கே மாட்சிஎங் கேஅவர்கள் சூழ்ச்சிஎங் கேதேவ மன்னன்அர சாட்சிஎங்கே ஞானம்எங் கேமுனிவர் மோனம்எங் கேஅந்த நான்முகன் செய்கைஎங்கே நாரணன் காத்தலை நடத்தல்எங் கேமறை நவின்றிடும் ஒழுக்கம்எங்கே ஈனம்அங் கேசெய்த தாருகனை ஆயிர இலக்கம்உறு சிங்கமுகனை எண்அரிய திறல்பெற்ற சூரனை மறக்கருணை ஈந்துபணி கொண்டிலைஎனில் தானமிங் கேர்சென்னை கந்தகோட் டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே.



சுழன்றும் எர்ப்பின்னது உலகம் என்றது வான்மறை

உலகம் தன்னைத்தானே நிலைநிறுத்திக்கொள்ள சூரியனை  சுற்றி ஓடியே ஆகவேண்டும் இல்லாவிட்டால் சூரியனுக்குள் போய் விழுந்து அழிந்துபோய்விடும்

அதுமட்டுமல்ல உலகிலுள்ளோர் சுழன்று சுழன்று பல வகையான தொழில்கள் வினைகளை செய்துகொண்டே இருக்கிறார்கள்

என்ன செய்தாலும் அவை அனைத்தும் எதை சார்ந்து உள்ளன என்றால் உணவளிக்கும் உழவுத்தொழிலை நம்பி .



இந்த உணர்வை கொட்டி 9 வயது சிறுவன் வள்ளலார் சொல்கிறார் :

உழல்உற்ற உழவுமுதல் உறுதொழில் இயற்றி மாந்தர்கள் என்ன செய்கிரார்களாம் பல பொருள் ஈட்டுகிரார்களாம் ஆனால் அவை அனைத்தும் மலம் ஒத்த உலகப்பொருட்களே
பொருளீட்ட பாடுபடுகிறார்கள் பிறகோ வயிறுக்கு பாடு

உடலை இன்று நடத்த எவ்வளவு சக்தி செலவாகுமோ  அவ்வளவு சக்தியை உள்ளெடுக்க உண்டால் போதும்

அளவுக்கதிகமாக நாம் உண்ணும் உணவே சர்க்கரையாக இரத்தத்தில்  அதிகரித்து சர்வ ரோகங்களின் நண்பனான சர்க்கரை வியாதியாக மாறிவிடுகிறது

தேவையின் அளவு மனிதனுக்கு  தெரியாத அளவு அவனின் வயிறு இருக்கிறதே அது தகித்துக்கொண்டே இருக்கும் போடு போடு உள்ளே போடு என பசித்தீ எரிந்துகொண்டே இருக்கும்

வயிறு என்ற உலைக்களம் அடக்கத்தேராமல் ஆன்ம வாழ்வு இல்லை

போதிசத்வன் ஆலமரத்தடியில் வயிறை அடக்கி எலும்பும் தோலுமாக ஆன பிறகே ஞானம் கிடைத்தது

வயிறுக்கும் நாவுக்கும் மனிதன் அடிமையாகக்கூடாது நமக்கு அது அடிமையாக இருக்கவேண்டும் யோகியின் முதல் அடையாளம் வயிறும் நாவும் அவனுக்கு அடங்கியுள்ளதா என்பதே ஆகும்

கிடைத்தால் உண்பார்கள் உண்ணாமலும் இருப்பார்கள்

வயிறு எரியாமல் இருந்தால் மட்டும் போதாது ; நாவு சுவையை நாடலாகாது

வீண்

உறுவயிறு நிறையவெண் சோறடைத் திவ்வுடலை
ஒதிபோல் வளர்த்துநாளும்
விழல்உற்ற வாழ்க்கையை விரும்பினேன் ஐயஇவ்
வெய்யஉடல் பொய்என்கிலேன்

வள்ளலார் நமக்காக புலம்பல் பாடுகிறார் ; அப்படியாவது கேட்கும் நமக்கு நான் உடலல்ல ; உடலல்ல ஆத்மபோதம் வராதா ?

வெளியுலகத்தின் மயக்கமா ;  விதவிதமாக வரும் மாயைகளின் விசமா ; முற்பிறவிகளின் தோஷத்தால் உண்டாகும் விதியின் விளைவா அறிகிலேன்

உழல் உற்ற உழவு உலகத்திற்கு அடிப்படை போல ஆன்ம வாழ்வின் மேன்மைக்கு அடிப்படை கழல் உற்ற கால் மலர்பாதம்

யாருடைய பாதம் என்றால் சற்குருக்களாகிய அதிதேவர்களின் பாதம்

அந்தப்பாதத்தில் என்ன இருக்கிறது கழல் சிலம்பு

சிலம்பில் வெளியே வளையம் மட்டுமே உலகிற்கு தெரியும் ஆனால் உள்ளே பரல் அதனை அணிந்துள்ளவருக்கு மகிமையை தருவது தாயத்து போல பேட்டரி போல அருள் நிலையின் அளவை உள்வாங்கி  ஆற்றல்களமாக மாறி அணிந்துள்ள மனிதனுக்கு மகிமை தருவது அது

உலகத்தில் வாழ தொழில் அவசியம் என்பதைபயன்படுத்தி உலகம் மனிநிதர்களை அடிமையாக்குவதுபோல கழல் உற்ற அதிதேவரின் பாதம் மனிதனை அருள்வெளிக்குள் ஆட்படுத்துகிறது

ஈனம்அங் கேசெய்த தாருகனை ஆயிர இலக்கம்உறு சிங்கமுகனை எண்அரிய திறல்பெற்ற சூரனை மறக்கருணை ஈந்துபணி கொண்டிலைஎனில்

மனித வாழ்வில் நாம் எவ்வளவுதான் கேடு செய்தாலும் அதிதேவர்களின் பாதம் என்றாவது ஒருநாள் கருணை புரிந்து அவனின் தவறுகளை மன்னித்து கருணை புரிவது நம்மைப்படைத்த இறைவனின் திட்டமாக உள்ளது . கடவுள் கிருபை செய்யவில்ல்லையானால் ஒருவரும் தேற முடியாது

மனமான ஒருசிறுவன் மதியான குருவையும் மதித்திடான் நின் அடிச்சீர் மகிழ்கல்வி கற்றிடான் சும்மாஇ ரான்காம மடுவினிடை வீழ்ந்துசுழல்வான் சினமான வெஞ்சுரத் துழலுவன் உலோபமாம் சிறுகுகையி னூடுபுகுவான் செறுமோக இருளிடைச் செல்குவான் மதம்எனும் செய்குன்றில் ஏறிவிழுவான் இனமான மாச்சரிய வெங்குழியின் உள்ளே இறங்குவான் சிறிதும்அந்தோ என்சொல்கே ளான்எனது கைப்படான் மற்றிதற் கேழையேன் என்செய்குவேன் தனநீடு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே. 

ஆத்மா பல பிறவிகளாக நமது அனுபவங்களை பதிந்து வைத்துள்ள ஹார்ட் டிஸ்க் என்றால் இப்போது உலகில் காணும் பொருட்களுக்கேற்ப எண்ணமாக சிந்தனையாக வெளியே வருவது மனம் - ராம்

கம்ப்யூட்டர் போன் வாங்கும் போது ராம் எவ்வளவு என கேட்கிறோமல்லவா ராம் அதிகமாக இருந்தால் தடுமாறாமல் வேகமாக இயங்கும் இல்லாவிட்டால் குண்ணி குண்ணி இயங்கும் ஹெங் ஆகுது என்போம்

இந்த ராம் போன்றதுவே மனம் . நம் ஐந்து புலன்கள் உலகத்தில் உரசும்போது கவனிக்கும் எதைப்பற்றியும் நமக்கு முன்னே என்ன தெரியுமோ அதை வைத்துக்கொண்டு எண்ணமாக வெளியே வரும்

மனம் நம்மை கேட்கமலேயே கருத்து கந்தசாமி கருத்து கண்ணம்மாவாக வேலைசெய்துகொண்டிருக்கும் எதையாவது சொல்லிக்கொண்டே இருக்கும்

இந்த மனம் அலைந்துகொண்டே இருக்கிறதே இதற்குத்தான் நம் உடலின் நிறைய சக்தி செலவாகிக்கொண்டே இருக்கிறது

இந்த மனதை அலையவிடாமல் அடக்க கற்றுக்கொண்ட ஞானிகள் இளமை குன்றாமல் சாப்பிடாமல் இருக்கும் ரகசியம் அவர்களுக்கு சக்தி செலவாவதில்லை

மனம் அடங்கினால் தேஜஸ் மின்னும்

உலகத்தில் பல விசயங்கள் நம் முன் வந்துகொண்டேதான் இருக்கும் . அதைப்பற்றியெல்லாம் ஓயாமல் கடல் அலை போல எண்ணங்களை வெளிப்படுத்துவதே மனம்

அந்த எண்ணங்களால் நமக்கு என்ன லாபம்

ஒன்றுமே தெரியாத இருட்டறைக்குள் இருந்தாலும் அது அமைதியாக இருக்குமா எதையாவது சொல்லி குழப்பிக்கொண்டுதான் இருக்கும்

தியானம் என்ற பதம் மனம் அலைவுறா நிலையை அடைவதற்கான பயிற்சியேயாகும்

மனம் அலைவுறா நிலை சமாதி

ஒரு மணி நேர முயற்சியில் ஒரு வினாடி சமாதி சித்திக்காதா என்பதற்காகவே சித்தர்களும் ஞானிகளும் சாதகர்களும் தியானிக்கிறார்கள் ஏங்குகிறார்கள்

அந்த சமாதியை அணுபவித்தோர் ஒரே ஒரு வினாடியில் பல மணி நேரம் உறங்கியதற்குரிய புத்துணர்ச்சியை பலத்தை உணர்வார்கள்

மனம் தெளிந்து குழப்பங்கள் அடங்கி அறிவு விளித்துக்கொள்வதால் ஞானம் ஆளுமைக்கு வருகிறது

சமாதியின் நேரத்தை அதிகரிக்க முடிந்தவர்களே உலகில் பெரிய ஞானிகளாக அறியப்பட்டார்கள் பலருக்கு முன்னோடிகளாகவும் ஆனார்கள் உலகை புரட்டியும் போட்டார்கள்

மாகா குரு வள்ளல் பிரானும் அந்த மனம் என்னும் சிறுவனைப்பற்றி நொந்துகொள்கிறார்



சிறிதும் அந்தோ 
என்சொல் கேளான் எனது கைப்படான் மற்றிதற்
கேழையேன் என்செய்குவேன்

மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்கவேண்டாம்

மனம் ஏன் செம்மைப்பட மறுக்கிறது

அது அமைதியாக இல்லாமல் கண்டதையும் அலட்டிக்கொண்டே இருப்பதால்

வெற்றி பெற்றவர் சாதனையாளர் யோகத்தின் உச்சமாக ஒளி சரீரம் அடைந்தவர் 15௦ ஆண்டுகளுக்கும் அதிகமாக ஒருவர் ஏற்றி வைத்த அடுப்பு இன்னும் அணையாமல் அன்னதானம் நடந்துவருகிறதே அந்த உக்கம் யாரிடமிருந்து வந்ததோ அந்த வள்ளலார் சொல்கிறார் எனக்கு அடங்காத என் மனதிற்கு எதிராக ஏழை என்னால் என்ன செய்யமுடியும் ?

அந்த அடங்காப்பிடாரி மனம் என்னென்ன செய்கிறது என்பதே இப்பாடலின் பட்டியல்

பிறகு என்னதான் வழி ?

வள்ளலார் சொல்லிய ரகசியம் 
முழுசரணாகதி பக்தி மட்டுமே

பக்தி பக்தி அறியப்பட்ட சிவனையும் விட பெரியவரான அருவ இறைவனை சரணடைதல்

மனதை அடக்கு வாசியோகப்பயிற்சி செய் குண்டலினியை ஏற்று கண்ணைத்திற அது இது என்றெல்லாம் வள்ளலார் சொல்லவில்லை

நான் ஏழை இயலாதவன்

சர்வ வல்லவரான இறைவனை சரணடைவதால் மட்டுமே மனமது செம்மையாகும் பாவம் கழியும் ஆத்ம தூய்மை சித்திக்கும்

அரபு மொழியில் அல் என்றாலும் யூதமொழியில் எல் என்றாலும் அது நம் தமிழில்
நாம் பொதுப்படையாக குறிக்கும் இறைவன் என்ற பதத்தை குறிக்கிறது
இறைவன் என்று சொல்லும்போது மக்கள் அதை சிவன் என்றோ நாராயணன் என்றோ சொல்வதில்லை

இந்த உண்மையை புரிந்துகொண்ட வள்ளலார் அருட்பெருஞ்சோதி என அவரது இயல்பை வைத்து ஒரு பெயரை வைத்தார்

 
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
என இறைவனை வழிபட வள்ளலார் வழிகாட்டினாரே அதுவும் முகமது நபியால் வழிகாட்டப்பட்ட கலிமாவும் ஒரே அர்த்தம் உள்ளது என்பது பலருக்கு தெரிவதில்லை
 
அவன் அளவற்ற அருளாளன் என்பதே அருட்பெருஞ்சோதி
நிகரற்ற அன்புடையோன் என்பதே தனிப்பெருங்கருணை
அவன் அளவற்ற அருளாளன்
நிகரற்ற அன்புடையோன்
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

வாய்கொண் டுரைத்தல்அரி தென்செய்கேன் என்செய்கேன்

வள்ளல்உன் சேவடிக்கண்
மன்னாது பொன்னாசை மண்ணாசை பெண்ணாசை வாய்ந்துழலும் எனதுமனது 
பேய்கொண்டு கள்உண்டு கோலினால் மொத்துண்டு 
பித்துண்ட வன்குரங்கோ 
பேசுறு குலாலனாற் சுழல்கின்ற திகிரியோ 
பேதைவிளை யாடுபந்தோ 
காய்கொண்டு பாய்கின்ற வெவ்விலங் கோபெருங் 
காற்றினாற் சுழல்கறங்கோ 
காலவடி வோஇந்த்ர ஜாலவடி வோஎனது 
கர்மவடி வோஅறிகிலேன் 
தாய்கொண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே 
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி 
சண்முகத் தெய்வமணியே.

ஞானிகள் தங்கள் ஆன்ம வாழ்வில் போராடி வளர்ந்த விதம் தனக்குத்தானே விசாரத்தால் வருந்திய விதம் இரத்தக்காயங்களும் சிராய்ப்புகளும் நிரந்தவையாகும் . அதை அவர்கள் ஏன் பதிவு செய்கிறார்கள் என்றால் தன்னை அடி ஒற்றி பின்பற்றும் ஒரு ஆத்மாவிற்கு அவ்வார்த்தைகள் தைரியமும் தெம்பும் உத்வேகமும் அறிவும் ஞானமும் உணர்த்தும் என்ற நப்பாசையே

ஆனால் குருவின் பெருமையை பேசிவிட்டாலே போதும் குருவைப்போல ஆகிவிடுவோம் என்ற அளவிலேயே சீடர்கள் இருக்கிறார்கள்

ஒருவேளை உள்ளார்ந்து போராடி ஆத்ம ஞானம் தேடுவோர் வாழ்வில் அடைகின்ற தடைகள் நோவுகள் போராட்டங்கள் தான் என்ன என்ன

அந்த நோவு அல்லது சாதனை விழைய காத்திருக்கும் நோவு ஒன்று இருக்கிறது

இருத்தல் துயரம் இருத்தல் துயரம் என்ற ஒரு வார்த்தையை வாலிப வயது காலம் முதல் நான் அடிக்கடி உச்சரித்திருக்கிறேன்

சீதை அசோகவனத்தில் காவல் அரக்கியர் மத்தியில் மரத்தடியில் இருந்த ஓவியம் எனக்கு பிம்பமாக தோன்றும்

வரும் ஆனா வராது என்பதுபோல காற்றில் வரும் கானத்தையே நம்பிக்கொண்டிருப்பது

இறைவன் நம்மை கண்பார்த்தருள்வார் என்பதில் அடி ஆழத்தில் உள்ள நம்பிக்கை அவரை கிட்டிச்சேர கிணறு வெட்ட கிணறு வெட்ட பூதமாக எனக்குள்ளிருந்தே கிளம்பும் மாயைகள் பிரமைகள் குழப்பங்கள் கடமைகள் உறவினர்கள் நண்பர்கள் அன்றாட வாழ்வின் ஊடாக மெதுவாக ஊர்ந்து ஊர்ந்து நான் முன்னேறிக்கொண்டிருக்கிறேன் என்ற அனுபவம் ஞானம் என்பதோடு இருக்கிற இருத்தல்துயரமும் இருக்கிறது . இன்றைக்கே உச்சத்தை அடைந்துவிட வேண்டும் என்ற துடிப்பு இளம்பிள்ளை கோளாறு நம் எல்லோரையும் ஆட்சி செய்துகொண்டிருப்பது ஒரு பெரும் தடை

ஒரு உண்மையை சொல்வேன் . ராமன் வந்து மீட்ட பிறகு அக்கினிப்பிரவேசம் பின்பு வனவாசம் என்றெல்லாம் அவஸ்தை பட்டதை விட ராமன் வந்துவிடுவான் என்ற நம்பிக்கையோடு அசோகவனத்து சிறையிருப்பு இருத்தல் துயரம் ஒரு இன்ப மயமானது . உபத்திரவ காலத்தில் உபத்திரவப்படும் நபர்கள் மத்தியில் ஒரு நெருக்கம் அன்பு இழையோடுவதை நான் பலமுறை அனுபவித்திருக்கிறேன்

துன்பத்திற்குள் உள்ளார்ந்த சுகம்

இனபத்தால் வரும் சுகம் அல்ல

துன்பத்தால் வரும் சுகம் அது நம் மனதின் ஒரு முளையை இறைவன் மீது நங்கூரமடித்து அவனின் இரட்சிப்புக்காக காத்திருப்பது


ஏசாயா 32:2 அவர் காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும், வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும் விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும் இருப்பார். 
ஏசாயா 40:4. பள்ளமெல்லம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடுமுரடானவை சமமாக்கப்படும் 
29. சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுவார். 30. இளைஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபரும் இடறிவிழுவார்கள்.
31. கடவுளுக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள். 

இறைமனிதர்கள் அந்தகாரத்திலும் நம்பிக்கையோடுதானே காத்திருந்தார்கள் , நம்பிக்கை வீண் போனதில்லை
அந்த காத்திருப்பே பெரும் பலம் ,
இருந்தல்துயரமே சுகம்
வள்ளலாரும் துயருருகிறார் :

வாய்கொண் டுரைத்தல்அரி தென்செய்கேன் என்செய்கேன்

சேவடி மீது நம்பிக்கை வைக்காது உழலும் என் மனதைப்பற்றி என் சொல்வேன் என் சொல்வேன்

காட்டுக்கு வேட்டைக்கு செல்வோர் ஒரு குரங்கு சண்டை கூத்தை உருவாக்கி ரசிப்பார்களாம் . கேள்விப்பட்டிருக்கிறேன்

சாராயம் ஒரு சட்டி நிறைய வைத்துவிட்டு காரமான உணவையும் வைத்துவிட்டு நாலைந்து கம்புகளை அங்கு போட்டுவிட்டு போய் ஒழிந்து உட்கார்ந்துகொள்வார்கலாம்

பேதைக்குரங்குகள் கள்ளும் காரமும் உண்டுவிட்டு அங்கு கிடக்கும் கம்புகளை எடுத்து ஒன்றை ஒன்றை பலமாக தாக்கிக்கொண்டு சண்டையிடுமாம் ரத்தம் ஒழுக ஒழுக சண்டையை நிறுத்தவே நிறுத்தாதாம்

இகுதொப்ப நிலையே மனிதனின் மன நிலை

மிகவும் மோசமான ஒரு பிரகிருதி நமது மனமே

எந்த ஞானிகளும் சித்தர்களும் முத்தர்களும் இறைவனை கண்டு ஐக்கியமானவர்களும் மந்திரம் செய் தந்திரம் செய் என்று கூறவே இல்லை மதம் வளர்ப்போம் போராளிகளே என அறைகூவவில்லை

மனதை வெல்லுங்கள் மனதை வெல்லுங்கள் என்றுதான் சொன்னார்கள்

வள்ளலாரும் தன் மனதைப்பற்றியே இப்பாடல் முழுதும் புலம்புகிறார் 

காற்றினாற் சுழல்கறங்கோ 

காலவடி வோஇந்த்ர ஜாலவடி வோஎனது 
கர்மவடி வோஅறிகிலேன்

10. இதோ, கல்கியாகிய ஆண்டவர் பராக்கிரமசாலியாக வருவார்; அவர் தமது புயத்தினால் அரசாளுவார்; இதோ, அவர் அளிக்கும் பலன் அவரோடேகூட வருகிறது; அவர் கொடுக்கும் பிரதிபலன் அவருடைய முகத்துக்கு முன்பாகச் செல்லுகிறது.

11. மேய்ப்பனைப்போலத் தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார்.

வரப்போகிற சத்திய யுகமே நமக்கு நல் வாழ்வு அளிக்க வல்லது
  


அவரது வருகைக்கு பாதையை செப்பனிடுவோம்





No comments:

Post a Comment