Total Pageviews

Thursday, September 29, 2016

கண்ணகியும் காரைக்கால் அம்மையும்






கண்ணகியாக இருக்கும்போது பளிச்சென்று உருவம் இல்லை என்பதால் அழகுக்கும் ஒயிலுக்கும் வேறொருத்திக்கு அடிமையானான் கணவன் அவனோடு கண்ணகி மல்லுக்கட்டவில்லை வம்பிழுக்கவில்லை கண்ணீர் விட்டு கெஞ்சி மன்றாடவில்லை

தன் அன்பை என்றாவது உணர்ந்து வந்து சேரமாட்டானா என ஏங்கிக்கொண்டு மட்டும் இருந்தாள் பிரார்த்தனை மட்டும் செய்துகொண்டிருந்தாள்

மனதில் ஏக்க பெருமூச்சு மட்டுமே அவள் வாழ்வாக பல ஆண்டுகள் ஓடியது

பெற்றோர்கள் உற்றார் அவனை கட்டிவைத்தார்களே தவிர கோவலன் கண்ணகியை கொஞ்சம் கூட உணரவும் இல்லை மதிக்கவும் இல்லை அவளும் பெண் அவளின் ஏக்க தாபங்களை பற்றி அறிந்தவன் இல்லை

வீட்டுக்கு வருவான் காசுபணத்தை எடுத்துக்கொண்டு மாதவி வீட்டில் போய் புகுந்துகொள்வான் திரும்பவும் பணத்தேவைக்கு மட்டுமே வருவான்

சொத்து பத்துகள் அனைத்தும் தீர்ந்து மாதவியின் வீட்டில் நுழைய முடியாமல் விரட்டி விடப்பட்டபிறகுதான் நிதானத்துக்கு வந்தான்

இவ்வளவு சொத்து போனபிறகு இந்த ஊரில் சாதாரண தொழில் செய்யமாட்டேன் என சுய கெளரவத்துக்கு இழுக்கு என உடனே கிழம்பு என்றான்

கண்ணகியை ஏதாவது உணர்ந்தானா மதித்தானா தவறு செய்துவிட்டேன் என தேற்றினானா இது ஏதும் இருந்தது போல தெரியவில்லை

தன்னை கட்டிய மணாளனுக்கு அடிமை என்கிற முழு சமர்ப்பணம் என்ற உயர்ந்த நெறி ஒருவகையில் பக்தியோகத்தின் லட்சனத்திற்குள் வருகிறது

அந்தப்பொறுமையும் பிரார்த்தனையும் சரணாகதி தத்துவத்திற்கு ஒத்து வருகிறது

யாரை நோக்கிய பிரார்த்தனை எவ்வளவு முக்கியமோ அதுபோல பிரார்த்தனை என்பதன் தரமும் முக்கியமானது

பொறுமையான எதிர்பார்ப்பை சிறந்த வேள்வியாகவே இறைவன் கருதுகிறார்

இவைகள் கண்ணகியை இறைவனோடு நெருக்கத்துக்குள் உள்ளாக்கினால் கோவலனோ காமகசடனாக தன் மனைவியை மதிக்காதவனாக இறைவனை விட்டு விலகி சென்றுவிட்டான்

ஒரு பிறவியில் பத்து படி இறைவனை நோக்கி முன்னேறிய ஒரு நபர் அடுத்த பிறவியில் இறைவனை விட்டு இருபது படி கீழே விழக்கூடும்

கண்ணகி தனது சுயதர்மத்தில் கணவனுக்கு சரணாகதியோடு மேன்மையடைந்தாலே தவிர கோவலன் காமகசடன் ஆகி இயல்பில் வீழ்ந்துபோனான்

உடனே கிளம்பு என்ற போது இதுவரை தன்னை பேணி வந்த முன்னோர்களிடம் ஆலோசனை கேட்கவில்லை

எங்கே கோளாறு நேர்ந்தது எதை நேர் செய்யவேண்டும்

எந்த மறுபரிசீலனையும் இல்லை படிப்பினையும் இல்லை

மதுரைக்கு வந்து விதியின் சோதனை கோவலன் கொல்லப்பட்டான்

தன்னை இதுவரை மதித்தானா இப்போதாவது தனது அருமையை உணர்ந்தானா என தெரியாத ஒரு கணவன் நடைபிணம் போல தன்னை வைத்திருந்த போது வெகுண்டெளாத கண்ணகி அவன் கொல்லப்பட்டபோது வெகுண்டாள்

தவறை உணர்ந்தவுடன் உயிர் விட்டான் ஒரு மன்னன் அவனும் நீதிமானல்லவா ? அவனோடு உடனே உயிர் விட்டாளே கோப்பெருந்தேவி அவளும் உத்தமியல்லவா ?

தவறுக்கு பரிகாரமாக அம் மன்னன் உயிர் நீத்த பின்பும் கண்ணகிக்கு பழி வாங்கும் கோபம் ? இது வெறியல்லவா ?

மதுரையில் எத்தனை பேரை எரித்தாள் ? இது பாவமல்லவா ?

மதுரையை அறிந்தவர்களுக்கு ஒன்று தெரியும்

அறியாமையால் அவசரப்பட்டு கோவலனை சிரச்சேதம் செய்ய உத்தரவிட்ட பாண்டியனே  அடுத்த பிறவியில் தவயோகியாக வாழ்ந்து மதுரை கருப்பாயூரிணியில் தேகசமாதி ஆனார் . இன்னொரு பிறவியில் மேலக்காலில்  வசித்த கோப்பெருந்தேவிக்கு கனவில் தன் தேகசித்தி உள்ள இடத்தை  தோண்டி சிலை கிடைக்குமென்றும் முனியாண்டியாக  தவக்கோலம் உள்ளவராக உள்ள அந்த சிலையை பிரதிஸ்டை செய்து புசைத்தொழில் செய்து பிழைக்கும்படியும் வழிகாட்டினார் இன்றளவும் தீய சக்திகளில் கொடுரமானவைகளிடமிருந்து தன்னை அன்டுவோரை காத்தும் வருகிறார்

முனியாண்டியின் பூசாரிகள் அருள்நிலையில் நீ மதுரையை ஆண்டது உண்மையானால் இதை செய் என வேண்டுவதை பலர் அறிவார்கள்


ஆவிமண்டலத்தில் பேய் பிசாசு கட்டுகளை முனீஸ்வரரிடம் முறையிட்டு மக்கள் பரிகாரம் பெறுகிறார்கள்

ஆனால் கண்ணகியின் கோபம் பலர் கொல்லப்பட்டனர் அவளுக்கும் லாபமில்லை சமூகத்துக்கும் நன்மையில்லை பலர் கொல்லப்பட்டதால் தோஷம் பிடித்துக்கொண்டது 

ஆன்ம வாழ்வில் சில சித்துக்கள் கிடைக்கும்போது பிரயோஜனமில்லா வழியிலும் உலகுக்கு கெடுதலாகவும் அந்த சித்தை செலவிடுகிறார்கள்

தன்னை மதிக்காத கணவனுக்காக தவ வாழ்வு வாழ்ந்தவள் தன் சித்தியை பலரை அழிக்க பிரயோகித்தாள்

இப்போது கண்ணகியின் அடுத்த பிறவியை பாருங்கள் :

காரைக்காலில் செல்வந்தனனின் மகள் புனிதவதியாக பிறந்தார் வீட்டோடு மாப்பிள்ளையை திருமணம் முடித்து அவன் வியாபாரம் செய்கிறான்

கண்ணகிக்கும் பிள்ளையில்லையில்லாதது போல புணிதவதிக்கும் பிள்ளையில்லை








ஆனால் எதோ சித்துக்கள் இருப்பதை கணவன் உணர்கிறான்

மாம்பழத்தை கொண்டுவந்து நாடகத்தை ஆரம்பிக்கிறார்கள்

புணிதவதி பிராத்தித்தால் மாம்பழம் வருகிறது

கணவன் புணிதவதியை விட்டு ஓடி விட தீர்மானிக்கிறான்அவனே கோவலன்

வெளிநாட்டுக்கு வியாபாரம் செய்ய செல்வதாக கூறி மதுரையில் போய் செட்டிலாகி புதிய மனைவியோடு குடும்பம் நடத்தி பிள்ளையும் பெற்றுக்கொள்கிறான்

மாதவி கணிகையர் குடும்பத்தில் பிறந்து தனது தாயாரின் நிர்வாகத்தில் கோவலனின் வைப்பாட்டியாக வாழ்ந்தாலும் மனதில் கோவலனைத்தவிர அடுத்தவருக்கு இடம் கொடாதவள்

மாதவியின் தாயாரால் கோவலன் விரட்டி விடப்பட்டதும் அவன் ஊரை விட்டு போய் விட்டதும் தெரிந்ததும் சமண மதத்தில் தன்னை அர்ப்பணிித்துக்கொள்கிறாள்

மாதவியும் தவநெறிக்குள் சென்று பாவங்களை குறைத்து இறைவனை நெருங்குகிறாள்

மறுபிறவியில் கோவலனே கண்ணகியின் தெய்வீக இயல்பை கண்டு அஞ்சி ஓடி மதுரையில் பிறவி எடுத்திருந்த மாதவியோடு நிம்மதியாக வாழத்துவங்குகிறான்

தன்னை தேடி வந்த கண்ணகியிடம் காலில் விழுந்து விவாகரத்து பெற்றுக்கொள்கிறான்

இப்போது கண்ணகியின் தவம் கேள்விக்குள்ளாகி விட்டது

கண்ணகியின் அன்பு எதிர்பார்ப்பு கேள்விக்குள்ளாகிவிட்டது

மனித அன்பு நிரந்தரமானதல்ல

மனிதர்கள் மீது வைக்கிற பிரேமை மாயமானது அர்த்தமும் அற்றது வீண்

கடவுளுக்கு மனித ஆத்மாவுக்கும் இடைப்பட்ட உறவே அன்பே பக்தியே நிரந்தரமானதும் நீடித்து வருவதும்

அதே மதுரையில் கோவலனே கண்ணகியின் காலில் விழுந்து விவாகரத்து பெற்றுக்கொள்ள எதற்காக அவள் மதுரையை எரித்தாள் என்பதை இறைவன் கேள்விக்குள்ளாக்கி விட்டார்

அப்போது அவள் சுய வெறுப்பில் தன்னை பேயுறுவாகும் படி தன் சித்தியை தன் மீதே பிரயோகித்துக்கொண்டாள் மேலும் இறைவனை நாடி ஊரூராக  சேத்ராடனம் செல்லஅழகிய பெண் உரு பேரிடர் விளைவிக்கும்என்பதாலும் விரும்பியே  பேயுரு ஏற்றுக்கொண்டார் 

தன்னை எப்போதும் கைவிடாதவரான அதிதேவர் சிவனின் மீது ஈடுபாடு பிரேமையை வளர்த்துக்கொள்கிறாள்

நிரந்தரமற்ற மனித உறவுக்காக ஏங்கி நாளை வீணாக்குவதை விட இறைவன் மற்றும் அதிதேவர்கள் மீது வைக்கும் அன்பே நீடித்தது நிரந்தரமானது

நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய

ஆதிசேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ ஆதிசேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி