Total Pageviews

Thursday, July 7, 2016

கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 5








அல்லது இந்தப்பிலேயரிலும் கேட்கலாம்
https://ia801505.us.archive.org/20/items/KandakottamDeivaManiMaalaiV_201607/Kandakottam_Deiva_mani_maalai%20V.ogg



சடமாகி இன்பம் தராதாகி மிகுபெருஞ்
சஞ்சலா காரமாகிச்
சற்றாகி வெளிமயல் பற்றாகி ஓடும்இத்
தன்மைபெறு செல்வம்ந்தோ
விடமாகி ஒருகபட நடமாகி யாற்றிடை
விரைந்துசெலும் வெள்ளம்ஆகி
வேலைஅலை யாகிஆங் காரவலை யாகிமுதிர்
வேனில்உறு மேகம்ஆகிக்
கடமாய சகடமுறு காலாகி நீடுவாய்க்
காலோடும் நீராகியே
கற்விலா மகளிர்போல் பொற்பிலா துழலும்இது
கருதாத வகைஅருளுவாய்
தடமேவு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

உப்புற்ற பாண்டம்என ஒன்பது துவாரத்துள்
உற்றசும் பொழுகும்உடலை
உயர்கின்ற வானிடை எறிந்தகல் என்றும்மலை
உற்றிழியும் அருவிஎன்றும்
வெப்புற்ற காற்றிடை விளக்கென்றும் மேகம்உறு
மின்என்றும் வீசுகாற்றின்
மேற்பட்ட பஞ்சென்றும் மஞ்சென்றும் வினைதந்த
வெறுமாய வேடம்என்றும்
கப்புற்ற பறவைக் குடம்பைஎன் றும்பொய்த்த
கனவென்றும் நீரில்எழுதும்
கைஎழுத் தென்றும்உட் கண்டுகொண் டதிலாகை
கைவிடேன் என்செய்குவேன்
தப்பற்ற சென்னையில் கந்தகோட் டத்துள்வளா
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

எந்தைநினை வாழ்த்தாத பேயர்வாய் கூழுக்கும்
ஏக்கற்றி ருக்கும்வெறுவாய்
எங்கள்பெரு மான்உனை வணங்காத மூடர்தலை
இகழ்விற கெடுக்கும்தலை
கந்தமிகு நின்மேனி காணாத கயவர்கண்
கலநீர் சொரிந்தஅழுகண்
கடவுள்நின் புகழ்தனைக் கேளாத வீணர்செவி
கைத்திழவு கேட்கும்செவி
பந்தம்அற நினைஎணாப் பாவிகள் தம்நெஞ்சம்
பகீர்என நடுங்கும்நெஞ்சம்
பரமநின் திருமுன்னர் குவியாத வஞ்சர்கை
பலிஏற்க நீள்கொடுங்கை
சந்தமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளா
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

ஐயநின் சீர்பேசு செல்வர்வாய் நல்லதெள்
அழுதுண் டுவந்ததிருவாய்
அப்பநின் திருவடி வணங்கினோர் தலைமுடி
அணிந்தோங்கி வாழுந்தலை
மெய்யநின் திருமேனி கண்டபுண் ணியர்கண்கள்
மிக்கஒளி மேவுகண்கள்
வேலநின் புகழ்கேட்ட வித்தகர் திருச்செவி
விழாச்சுபம் கேட்கும்செவி
துய்யநின் பதம்எண்ணும் மேலோர்கன் நெஞ்சம்மெய்ச்
சுகரூப மானநெஞ்சம்
தோன்றல்உன் திருமுன் குவித்தபெரி யோர்கைகன்
சுவர்ன்னமிடு கின்றகைகள்
சையம்உயர் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

செல்வம் அதை  சேர்க்க அலைபவர்களுக்கு முகுந்த சஞ்சலத்தை கொடுக்கும் அப்படி சஞ்சலப்பட்டு சேர்க்கிரவர்களிடத்து ஜடமாக புதைக்கப்பட்டு கிடக்கும் கருப்புப்பணம் என ஸ்விஸ் பேங்கில் கிடக்கும் அதற்கு வட்டியும் கட்டுவார்கள் . ஆனால் அது எப்போதும் வீடு வந்து சேராது கணக்கில்  எழுதி எழுதி பார்த்துக்கொள்ளுவார்கள் அவ்வளவுதான் .

இன்னும் சில அமைச்சர் பெருமக்கள் அல்லக்கை பினாமிகளின் பேரால் சொத்தாக வாங்கிபோட்டு அவர்களை எப்போதும் கூட வைத்து சாப்பாடு சோறு போட்டுக்கொண்டிருப்பார்கள் ; ரெண்டு மூன்று தலைமுறைக்கு பின்பு அது கைவிட்டு போய்விடும்

பிறகெதுக்கு அளவுக்கு அதிகமாக காசாக சேர்க்கிறார்கள் .இருந்தால் சடமாக இருக்கும் போனால் ஆறாக போய்க்கொண்டிருக்கும் அந்த செல்வத்தை கருதாத வகை அருளுவாய்

இல்லை என்று ஏங்காத அளவு செல்வம் வந்துகொண்டிருந்தால் போதும் ; அருளை நாடுவோருக்கு பொருளை தேவைக்கு இறைவன் கொடுக்க அறிந்தவர் . இல்லை என ஏங்க விடமாட்டார் ரெம்பவும் வந்து இருப்பிலும் இருக்காது

7. கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.

8.
ஏனென்றால், கேட்கிற எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.

9.
உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக்கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா?

10.
மீனைக்கேட்டால் அவனுக்குப் பாம்பைக்கொடுப்பானா?

11.
ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? -  சற்குரு இயேசு

இறைவன் நம் தேவையை இல்லை எனாது சந்திப்பார் என்ற நம்பிக்கை உள்ள மனிதனே பணத்தாசை என்னும் பேயிடமிருந்து தப்பமுடியும்

அடுத்த பாடல் பெண்ணாசை பற்றியது மனிதனுக்கு கவிதை எழுதி அதை நான்கு பேர் படித்து ஆகா ஓகோ என பாராட்டவேண்டும் என்றொரு நப்பாசை உள்ளது . ஆனா உணா என்றால் மானே தேனே குயிலே என்று கவிதைபாட ஆரம்பித்துவிடுகிறார்கள் . அதாகப்பட்டது என்னெவென்றால் எல்லா ஆணுக்குள்ளும் பெண்மை இருப்பதை அறியாமல் உணர்ந்து திருப்தியடையாமல் தன்னை விட்டுப்போன ஒன்றை தேடி அலையும் தாகம் இந்த மையல்

ஆதியில் சிவன் ஒருவரே படைக்கப்பட்டார் பின்பு அவரில் பாதி பார்வதியாக பெண்ணாக பிரிக்கப்பட்டார் . கருப்புசாமியால் ஏமாற்றப்பட்டு காமம் உண்டாகும்வரை நல்ல இணையாக அன்பும் ஆதரவுமாகவே இதமும் நேயமுமாகவே இருந்தார்கள் இன்றும் கூட பாருங்கள் ஆண்பெண் பேதமில்லாத சிறுவயதில் அனுபவங்கள் இதமாகவே இருக்கும் . வயது வந்தபிறகுதான் எல்லா பிரச்சினைகளும் . ஏக்கம் தாகம் மோகம் பித்து என்பதெல்லாம் எப்போதும் திருப்தி அடையாதது காரணம் தனுக்குள் மூழ்கி தன் முழுமையை உணராதவரை தனக்குள்ளேயே கரைந்துள்ள பெண்மையை உணராதவரை அதற்கு ஒருபோதும் ஈடாகாத பெண்களை நாடி நாடி திருப்தியில்லாமலேயே வாழ்வு ஓடிக்கொண்டிருக்கும்

உன் ஆத்மா முழுமையானது உனக்கு நல்ல இணை நீ மட்டுமே நல்ல நண்பன் நீ மட்டுமே உனக்குள்ளாகவே எல்லாமும் இருக்கிறது வெளியே கடவுளைத்தவிர யாரும் உனக்கு நிம்மதி கொடுக்கமாட்டார்கள் உதவியும் செய்யமாட்டார்கள் வீணாக ஏங்கி சுற்றி திரியாதே

உனக்குள்ளேயே மூழ்கி ஆனந்தத்தை உணர்க . இறைவனை உணர்ந்து அவனில் நிலைத்தால் தெய்வீக பேரானந்தம் ; என்றும் மங்காத என்றும் திகட்டாத பேரானந்தம் இறைவனின் சமூகம்

உன்னிடமிருந்து அரைகுறைகளுக்கு நிம்மதி பேரானந்தம் பாயவேண்டுமே தவிர அடுத்தவரிடம் யாசகம் கேட்காதே . இறைவனிடம் கையேந்து மனிதர்களிடம் எதையும் எதிர்பாராதே

பெண்மையை மதி போற்று எதையும் எதிர்பார்க்காதே

அடுத்த பாடலில் இறைவனை போற்றாத மனிதனின் உறுப்புகள் ஒவ்வொன்றும் கேவலமானது என்கிறார் வள்ளலார்

அடுத்த பாடலிலோ இறைவனை போற்றுகிற மனிதனின் உறுப்புகள் ஒவ்வொன்றும் போற்றுதலுக்குரியது என்கிறார்
இவைகள் நம்மை உணர்த்துவிக்கட்டும்

நாராயணன் நாமத்தினாலும் ஆதிசேஷனனின் நாமத்தினாலும் நாராயணியின் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் கடவுள் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் தமது அருளால் நிரப்ப வேண்டுகிறேன்  

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி