Total Pageviews

Saturday, March 19, 2016

அசுரர்களின் பிடியிலிருந்து விடுபட




64: வீணே பலி கவர் தெய்வங்கள்பால் சென்று, மிக்க அன்பு
பூணேன், உனக்கு அன்பு பூண்டுகொண்டேன், நின்புகழ்ச்சி அன்றிப்
பேணேன், ஒரு பொழுதும், திருமேனி ப்ரகாசம் அன்றிக்
காணேன், இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே.

இன்றைய அம்மன் கோவில்கள் அனைத்திலும் எப்படியோ சிவனுக்கு முக்கியத்துவம் குறைந்து நுழைவு வாயிலில் தட்சன் என்ற கருப்புசாமியின் ஆதிக்கம் கோலோச்சிக்கொண்டுள்ளது

இதில் ஓரளவு உண்மையும் உள்ளது ஆனால் ஆதியில் ஞானிகள் உருவாக்கிய காரணம் மாறி தலைகீழாக நடைமுறையில் உள்ளது என்பதே சமரச வேதத்தின் வெளிப்பாடாகும்

தட்சனுக்கும் ஆதிமனிதன் சிவனின் பாதியாள் பாரியாள் பார்வதிக்கும் தந்தை மகள் உறவு உண்டான பிறகு ஏற்பட்ட குழப்பத்தால் முதல் மனுஷி தீயில் விழுந்து தற்கொலை செய்துகொண்டாள்

சிவனின் வாழ்வில் துக்கமான ஒரு காலகட்டம் . தாடியும் மீசையுமாக சடையாண்டியாக அவர் தவ வாழ்வுக்குள் சென்றுவிட்டார்

சுடலையாண்டி என்றும் சொல்வார்கள் சுடுகாட்டில் பிரிவுத்துயர் தாழாமல் ஆண்டியாக கடும் தவத்தில் ஆழ்ந்துவிட்டார்

அந்தந்த காலகட்ட நபராக சிவனை நாம் உபவாசித்தால்  அதே தன்மைகள் துன்பங்கள் துயரங்கள் நம் வாழ்வில் இருந்தாலும் விடுதலை உண்டாகும்

நம் பாவங்களின் பலனாக துயரங்கள் நம்மை அடாது வாட்டினால் நான்கு அதிதேவர்கள் நாமத்தினால் கடவுளே அதிதேவர் சடையாண்டி கண்களில் தயவு உண்டாக்குவீராக என்று வேண்டிவாருங்கள் நாம் மேடேறும் வழி திறக்கும்

ஏனென்றால் சோகத்தை அவர் ஆழ்ந்த தியானத்தால் ஆனந்தமாக மாற்றினார் . கடவுளின் தெய்வீக பேரன்பில் மூழ்கி திளைக்க கற்றோமானால் நமது பாவங்களோ உலகமோ எதையும் கடந்துவிட முடியும்

அவரின் தவ வாழ்வு நிறைவடைந்த போது அதிதேவர் நாராயணியே பார்வதியாக தீயிலிருந்து வெளிவந்து அவரது வாழ்வில் இணைந்தார் அவர் வாழ்வை ஒளியாக்கினார்


பிள்ளைகள் அன்னையில்லாமல் தவிப்பதை போக்கவும் சிவனை ஆறுதல் படுத்தவும் அதே தீயிலிருந்து அன்னை நாராயணி பார்வதியைப்போல வெளிப்பட்டு வந்து கிருபை செய்தாள்


தீக்குள் போனது மனுஷி ஆனால் வந்ததோ அதிதேவர் அதனால்தான் இவளை மாரியம்மா என்றனர் மாரியம்மா மாறி வந்தவள்


குலதெய்வங்களின் அடிப்படை கூட இந்த நிகழ்வுகளை ஒட்டியதாகவே இருக்கிறது இன்று எல்லா குலங்களிலும் குலதெய்வம் அவர்கள் வீட்டு பெண் ஒருவர் தீயில் விழுந்து மாண்டதாகவே பெரும்பாலும் இருக்கும்


மாண்டது மனுஷியாக இருந்தாலும் அந்த பேரை சொல்லிக்கொண்டு அன்னையே தன் தரத்தை தாழ்த்திக்கொண்டு குலதெய்வமாக வந்து உலக வாழ்வுக்கும் ஆறுதல் தருகிறாள்


மனிதர்கள் தப்பும்தவறுமாக கூட முதலில் வாழவேண்டும் வாழ்ந்தால்மட்டுமே ஞானம் அடையமுடியும்


ஆகவே குலதெய்வம் என்ற நிலையில் ரெம்ப தரம் தாழ்ந்து அன்னையே வருகிறாள்


இவ்வாறு உலக வாழ்வுக்கு அவள் ஊக்கம் தருவது உலக மாயைகளில் ஊறி திளைக்கட்டும் என்று அல்ல ; அதிலிருந்து மீண்டு பரத்திற்கு உய்யட்டும் என்பதற்கே


மனிதர்கள் மட்டும் மனம் திருந்தி உய்வது அல்ல ; அசுரர்களும் திருந்துவதே அன்னையின் நோக்கம்


ஆகவேதான் அன்னை கருப்புசாமிகள் போன்ற அசுரர்களையும் அண்ட இடம் கொடுத்துள்ளார்


கருப்பர்கள் நல்லவர்களே அவர்கள் ஆதியில் தேவதூதர்களே


அவர்களுக்கும் கடவுளுக்கும் ஏற்பட்ட பிரச்சினையே சிவனின் படைப்பு


தொடர்பாகவே தங்களுக்கு பிற்பாடு படைக்கப்பட்ட சிவனை கடவுளுக்கு


இனையாக மதிப்பளித்து வணங்கு என கடவுள் கட்டளையிட்டதை


ஏற்றுக்கொள்ள மனம் இல்லை


அதனால்தான் கலகம் செய்து அசுரர்களாக மாறினார்கள்


பைபிளிலிருந்தும் குரானிலிருந்தும் புரிந்துகொள்ள வேண்டியது இதுவே


கருப்பசாமி நாராயணனை மதிப்பார் அன்னையை மதிப்பார் சிவனை


மட்டும் மதிக்கமாட்டார்


அன்னையின் தனிப்பட்ட கோயிலில் கோவிலுக்கு வெளியே காவலுக்கு
நிற்பார் ஆனால் சிவன் கோவிலில் இருக்கமாட்டார்

தேனி மாவட்டத்தில் சங்கிலிகருப்பர் கோவில் ஒன்று கூளையனூர்
கிராமத்தில் உள்ளது

அதன் பரம்பரை பூசாரியை சந்தித்து விபரம் கேட்டேன்

சங்கிலி கருப்பு கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முப்புரத்தை
காத்தவர் அவரை சிவனும் நாராயணனும் நாராயணியும் சேர்ந்து
அச்சானி இல்லாத தேர் ஒன்றில் சங்கிலியால் கட்டிவைத்துவிட்டனர்
ஆனாலும் அந்த தேரையே தூக்கிகொண்டு எங்கும் பரப்பார் என்றார்


அபிராமி அந்தாதியில் முப்புரத்தை சிவனும் அன்னையும் தீ வைத்து
எரித்ததைப்பற்றி இரண்டு மூன்று இடங்களில் குறிப்பு வருகிறது

முப்புரத்தை அடக்கியதால் அன்னை திரிபுரசுந்தரி ராஜராஜேஸ்வரி
எனப்படுகிறாள்


முப்புரம் என்பது மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை அல்லது
ஆணவம் கன்மம் மாயை என்ற மூன்று அடிப்படை அசுர குணங்களை
குறிக்கிறது


இந்த மூன்று ஆசைகளை அசுரர்கள் மாயக்கோட்டையாக மனிதர்களின்
மனசில் கட்டி பூமியில் சகல சீர்கேடுகளையும் நடத்திவருகிறார்கள்


இதை ஆதமும் அன்னையும் ஞானத்தீயால் எரித்ததுபோல நாமும்
ஞானத்தால் எரித்து அசுரர்களை கட்டவேண்டும்


அவர்களுக்காக இறைவனிடம் பாவமன்னிப்பை கேட்டு பலி செலுத்தும்
பழக்கமே ஆதியில் இருந்தது


அதிலும் சைவபலியாக அம்மனின் திரிசூலத்தில் எலுமிச்சை கணியை
சொருகி இறைவா அசுரர்களை மன்னித்து நல்வழிப்படுத்துவீராக என
வேண்டுதல் செய்யவேண்டும்


அந்தப்பழக்கத்தை கருப்புசாமிக்கே அசைவபலி செலுத்தி மதுமாமிச
விருந்து கொண்டாடுவதாக மனிதர்கள் மாற்றிக்கொண்டார்கள்


பரலோக ராஜ்ஜியத்திற்கு விரோதமான சாமிகள் என்பதால் கருப்புசாமி
என பெயர்


வைணவத்திலும்  அசுரர்களை யாராலும் அடக்கமுடியவில்லை அப்போது
வைகுண்ட ஏகாதசி அன்று நாராயணன் மோகினியாக அவதாரமெடுத்தார்
அதைப்பார்த்து அசுரர்கள் சிந்தை மங்கி முழித்துக்கொண்டு நின்றனர்
அப்போது சிவன் அவர்களை அழித்துவிட்டார் என்பார்கள்


அன்னையின் கோவிலுக்கு வெளியே கருப்பசாமி ஏன் முழித்துக்கொண்டு
நிற்கிறார் என்பதற்கு இதுவும் ஒருகாரணம்


ஆதிநிலை எதார்த்தத்தை சொல்கிறேன் தனிப்பட்ட முறையில்
இறைவனுக்கும் அசுரர்களுக்கும் பிரச்சினைக்கு காரணம் கடவுளின்
மகிமையை அவர் சிவனுக்கு கொடுத்தபோதே அசுரர்கள் முரண்பட்டார்கள்


சிவனும் ருத்ரனாக உயர்ந்தபோது அவர்களை உண்டு இல்லை என
கடுமையாக நடந்துகொண்டார்


ஆனால் தாய்மையானவளோ ரெண்டும்கெட்டானைப்போல கொஞ்சம்
அவர்களை போஸித்தே வருகிறாள்


மாமனாருக்கம் மருமகனுக்கும் ஆகாமல் போனால் பெண்ணானவள்
என்ன செய்வாள்


அன்னை நாராயணி அப்படித்தானிருக்கிறாள்


அவள் அசுரர்களுக்கு இடம் கொடுத்து காளியாக சண்டியாக சிவனை
மிதிக்கவும் செய்வாள் துர்த்தேவதையாக இருப்பாள்


பாவத்தில் வீழ்ந்த மனிதன் பதில் விளைவுகளை தாங்கமுடியாமல்
இறைவனை நாடும்போது அவளே நம்மை ஆதரித்து பாவத்திலிருந்தும்
விடுதலை ஆக்குவாள் பவதாரிணி என்பார்கள் சிவனை ஆராதிப்பவளாக
இருப்பாள்


மாயையை தருபவளும் இவளே நாம் வேண்டாம் இந்த துர்க்குணங்கள்
என்று திருந்தினாலோ மாயையை போக்கி ஞானமுமளிப்பாள்


ராமகிருஷ்ண பரமஹம்சரின் குரு பவதாரணியேயாகும்


அந்த அன்னையின் அடியவர்கள் அசுரர்களுக்காக பாவமன்னிப்பை
இறைவனிடம் கோரவேண்டும் என்பது அன்னையின் சித்தம்


சிவனின் அம்சமான மனிதன் அசுரர்களுக்காக பாவநிவாரன பலியாக
ஏலுமிச்சை கனியை அறுத்து வேண்டுதல் செய்யவேண்டும் இந்த
பழக்கத்தை சிலநாட்களாக கடைபிடிக்கும்போது அசுரர்கள் நல்லிணக்கம்
ஆவதை உணர்கிறேன்


ஆனால் ஞானிகள் உருவாக்கிய நடைமுறையை நாமோ தவறாக
கடைப்பிடித்து வருகிறோம் இன்று அம்மன் கோவில்களில் சிறப்பு
கொடுக்கிறோம் என்பார்கள் அங்கோ கோவிலுக்கு வெளியே
இருக்கும் கருப்புசாமிக்கு உயிர்ப்பலி செலுத்தி மதுமாமிசம்
உண்பார்கள் பிறகு அப்படியே கோவிலுக்குள்ளும் போய்
தீட்டுப்படுத்துவார்கள்

அபிராமி அந்தாதியும் இதைக்கண்டிக்கிறது

வீணே பலிகவர் தெய்வங்களுக்கு பக்தி செய்யமாட்டேன் உன்னையே அன்பு செய்வேன் என்கிறது

இந்த பூமியும் காற்று மண்டலமும் பரலோகமும்
அன்னையே உன் மேன்மையால் தாய்மையால் நிரம்பியிருக்கிறது

65: ககனமும் வானும் புவனமும் காண, விற் காமன் அங்கம்
தகனம் முன் செய்த தவம்பெருமாற்கு, தடக்கையும் செம்
முகனும், முந்நான்கு இருமூன்று எனத் தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயது அன்றோ?--வல்லி. நீ செய்த வல்லபமே. 



66: வல்லபம் ஒன்று அறியேன், சிறியேன், நின் மலரடிச் செய்
பல்லவம் அல்லது பற்று ஒன்று இலேன், பசும் பொற் பொருப்பு--
வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய். வினையேன் தொடுத்த
சொல் அவமாயினும், நின் திரு நாமங்கள் தோத்திரமே.

வானமும் பூமியும் ககனமும் காணும்படியாக மன்மதனையும் அவன் வில்லையும் அம்பையும் ஞானத்தீயால் சிவன் சுட்டெரித்தார் முதல் மனுஷியான பார்வதி தற்கொலை செய்த பிறகு கடும் தவவாழ்வு மேற்கொண்ட சிவன் சகல மனிதர்களையும் ஆட்டிப்படைக்கும் காமம் என்ற அசுர குணத்தை ஞானத்தால் சுட்டெரித்து கடந்தார் அப்படி அவர் காமத்தை கடந்த பிறகே அன்னை நாராயணி என்ற அதிதேவர் அவருக்கு பார்வதியைப்போல வந்து இணையானார்

இந்த உறவு மனுஷ ரீதியான உறவு அல்ல அன்பும் ஆறுதலும் இதமும் பராமரித்தலுமே பெண்மையாகும் . அதில் ஆண்பெண் பேதம் என்ற விசத்தை கலந்தது அசுரர்களே ஆகும் . உலகத்தின் சகல பாவங்களுக்கும் ஊற்றுக்கண் காமமே ஆகும்

அன்னையின் பிரகாசத்தை தரிசிக்க வேண்டுமானால் உள்ளது உள்ளபடி அன்னையை உணரவேண்டுமானால் சிவனைப்போல மன்மதனின் வில்லையும் அம்பையும் சுட்டெரிக்கவேண்டும் காமத்தை கடர வேண்டும் அதற்கு அவளிடமே அழுது மன்றாடவேண்டும்

அவளே பவதாரிணி பாவங்களை பரிகரிக்கிறவள் மனிதனை முருகனாக மாற்றுகிற வல்லமை உள்ளவள்

முருகன் எப்படி உருவாக்கப்பட்டார் என ஸ்கந்தபுராணம் கூறுகிறது ?

முருகனை உருவாக்க முதலாவது அன்னை ஆறு கார்த்திகை பெண்களை வெளிப்படுத்துகிறாள் . இந்த கார்த்திகை பெண்கள் உலக வாழ்வுக்கு அடிப்படையான ஆறு குணங்களை குறிப்பவர்கள் காமம் மோகம் குரோதம் லோபம் மதம் மாச்சரியம் எனப்பட்ட இக்குணங்களே உலக வாழ்வை நடத்துகிறது ஆனால் பாவங்களை பெருக்கி துன்ப துயரங்களுக்கு காரணமாகவும் ஆகிறது

இந்த கார்த்திகை பெண்களுக்கு சிவன் முதலாவது குருகீதையை உபதேசிக்கிறார் அப்போது அதை செவி சாய்க்கும் மனநிலை இல்லாமல் பராமுகமாக அவர்கள் இருந்ததால் சிவன் அவர்கள் கல்லாகும்படியாக சபித்துவிடுகிறார் திருக்கோஸ்டியூருக்கு அருகில் உள்ள பட்டமங்கை என்ற பட்டமங்கலத்தில் இப்படி எத்தனை ஆண்டுகள் அவர்கள் கல்லாக இருந்தார்களோ அப்படித்தான் மனித ஆத்மாக்களும் உலக வாழ்வில் நல்லதையும் கெட்டதையும் செய்துகொண்டு கல்லாக கிடக்கிறது




பலபிறவிகளுக்கு பிறகு அந்த ஆத்மா போதும் போதும் உலக ஆசாபாசங்கள் என உணரத்தொடங்குகிறதோ அப்போது சற்குருநாதர் சிவன் மீண்டும் பட்டமங்கைகளை உயிர்பித்து குருகீதையை உபதேசிக்கிறார்

சிவன் ஞான உபதேசத்தால் அடிப்படை ஆறு அசுர குணங்களை ஆறு தெய்வீக குணங்களாக மாற்றுகிறார் அன்பு நேயம் பொறுமை ஈகை பரந்தமனம் நல்லிணக்கம் என்ற ஆறு தெய்வீக குணங்களாக பரிணமிக்கும்

சிவனின் ஞானக்கண்ணிளிருந்து உண்டான தீப்பொறிகளால் உண்டான ஆறு குழந்தைகள் இவர்களே இவர்களை பக்குவம் பெற்ற ஆறு கார்த்திகைப்பெண்களும் வளர்க்கிறார்கள் அதன்பிறகே ஆறு குழந்தைகளும் ஒருவராக முருகனாக மாறுகிறார்கள்

இதற்கு வல்லமை அளித்தவள் அன்னை நாராயணி என்கிறது அந்தாதி

முந்நான்கு பணிரெண்டு முகங்களை ஆறு அசுர குணங்களையும் ஆறு தெய்வீக குணங்களையும் மூதறிவால் இருமூன்று ஆறுமுகனாக மாற்றி செம்மையான ஒரே முகமாக முருகனாக மாற்றினார்களாம்

மனித குருமார்கள் அனைவரும் உபகுருனாதர்களே . இவர்களையே செம்படித்துக்கொண்டு திரியாமல் ஆவிமண்டல குருநாதர்களுக்காக ஏங்கி அந்த அனுபவம் பெற்ற பிறகே சற்குருநாதர்கள் நான்கு அதிதேவர்களின் பிரசன்னத்தை அடைய முடியும் அப்போதே நாமும் முருகனைப்போல ஆகி பரலோக பாக்கியம் பெறமுடியும்



67: தோத்திரம் செய்து, தொழுது, மின் போலும் நின் தோற்றம் ஒரு
மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர்--வண்மை, குலம்,
கோத்திரம், கல்வி, குணம், குன்றி, நாளும் குடில்கள் தொறும்
பாத்திரம் கொண்டு பலிக்கு உழலாநிற்பர்--பார் எங்குமே.


68: பாரும், புனலும், கனலும், வெங் காலும், படர் விசும்பும்,
ஊரும் முருகு சுவை ஒளி ஊறு ஒலி ஒன்றுபடச்
சேரும் தலைவி, சிவகாம சுந்தரி, சீறடிக்கே
சாரும் தவம், உடையார் படையாத தனம் இல்லையே.

தெய்வீக அன்பு தெய்வீக அழகு ஆகிய அன்னையின் அருட்பொழிவை உணர்ந்து தரிசித்தல் ஒன்றே உலக மாயைகளிலிருந்து விடுபடும் வழி அது சித்திக்காதோர் எப்படியோ மாயைகளில் சிக்கி உலக வாழ்வில் அழுந்தி பாவத்திலும் துக்கத்திலும் விழுவர் அவளை அறிந்து கொள்வதே தவம்

பஞ்ச பூதங்கள் நிலம் நீர் நெருப்பு காற்று விண் ஆகியவையும் இவை உருவாக்கும் ஐந்து உணர்வுகள் ஒளி ஒலி மனம் சுவை தொடுதல் ஆகியவையே சகல குணங்களுக்கும் உடலுக்கும் அடிப்படை இவைகளை ஆள்கிறவள் அன்னை . சிவகாமியாக நற்குணங்களின் தலைவியாக அவளை சரணடைவோர் மாத்திரமே பாவங்களை வென்ற பரிசுத்த வாழ்வால் உண்டாகும் நற்சீர் அடைய முடியும்


69: தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வு அறியா
மனம் தரும், தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே--
கனம் தரும் பூங் குழலாள், அபிராமி, கடைக்கண்களே,

நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய

ஆதிசேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ ஆதிசேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி