Total Pageviews

Saturday, November 26, 2016

திருப்பாவை 13



          
 

சுபத்ரையை எழுப்புவதற்கான முயற்சியில் கோதை அக்கா பாட பாட அவளுக்கு சுபத்ரை மீது அன்பும் பொங்கி வழிகிறது 

ஆயிரம் இருந்தாலும் அவளது மைத்துனி அல்லவா ?
அவளை குழந்தையாகவே பாவித்து அவளுக்கு ஆலோசனை சொல்லத்தொடங்குகிறாள்

புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார் 

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய் 

குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ. பாவாய். நீ நன் நாளால் 

கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.

பறவை இனங்களுக்கும் உணவு அளிப்பவன் பரந்தாமன் ; ஏனெனில் படைக்கப்பட்ட அனைத்தும் அவனுக்குள்ளேயே படைக்கப்பட்டது

அதே நேரத்தில் அவனுக்குள்ளேயே படைக்கப்பட்டிருந்தாலும் பொல்லாதவர்களாகிய அரக்கர்களின் தலையை கிள்ளி எரிய அவன் தயங்கியதில்லை

அப்படிப்பட்ட பரந்தாமனுக்கு முழு சரணாகதி அடைந்த பக்தர்கள் பரலோக ராஜ்ஜியத்தின் பிள்ளைகளாவார்கள் ; அவர்கள் பூமியில் இருந்தாலும் உலகத்தால் பகைக்கப்பட்டே இருப்பார்கள் ஆகவே அவர்கள் இடைவிடாது பரந்தாமன் மூலமாக இறைவனை வேண்டிக்கொண்டே வாழும் நிர்ப்பந்தத்தில் இருப்பார்கள்

ஆகவே அவர்கள் வாழ்வு எப்போதும் நோன்பு நோற்பதைப்போலவே இவ்வுலகில் இருக்கும்

இடறலும் நோவும் வருவதும் அதை பிரார்த்தித்தே கடந்து செல்லுவதுமான பயிற்சியால் அவர்கள் எப்போதும் இறைவனின் புகழை துதித்தவர்களாகவே இருப்பார்கள்

இது பாவைக்கூத்து போல

ஒரு நாடகம் என்றாலே அதில் இடறல் தரும் வில்லனும் அவனை வெல்லும் ஒரு கதாநாயகனும் அவசியம்

அந்தப்போர்க்களத்தில் பிள்ளைகளின் பலம் எதுவென்றால் இறைவனையும் சற்குருவையும் புகழ் பாடிக்கொண்டிருப்பது மட்டுமே

வேதங்கள் அனைத்தும் பக்தர்களை மணவாட்டிகளாகவே சித்தரிக்கின்றன

யாருக்கு மணவாட்டிகள் என்றால் வரப்போகிற சத்திய யுகத்தை ஆளப்போகிற யுகபுருஷன் கல்கிக்கு மணவாட்டிகள் அல்லது முருகனுக்கு மணவாட்டிகள் வள்ளிக்குறத்திகள்

வள்ளிக்குறத்திகளுக்கு இறைபக்தி ஆபரணமாக இருக்கிறது ; ஆனால் ஒரு பெரிய குறை இருக்கிறது ; அது ஏதென்றால் சுய பெருமையில் விழுந்து விடுவார்கள்

அக்கா சொல்கிறார்கள் ; குள்ளக்குளிர குடைந்து உனக்குள்ளாக மூழ்கி சுய பெருமையில் வீழ்ந்து நீராடிக்கொண்டிராதே
ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஒரு பக்தன் அசுரர்களோடு போராட வேண்டும் ; அதில் கொஞ்சம் வெற்றி பெற்றவுடன் அவனை மயக்கும் சுய பெருமையோடு போராடவேண்டும்

ஆன்மீக வாழ்வில் சமுதாயத்தில் அசுரர்கள் எவ்வளவோ இடரலோ அவ்வளவு இடரல் பூசாரிமார்களாலும் வருகிறது

அவர்கள் தங்கள் தொழிலின் நிமித்தம் இறைசக்திகளுக்கு குத்தகைதாரர்கள் போல தங்களை கருதிக்கொண்டு ஜீவர்களை முன்னேற விடாமல் தடுக்கிறவர்கள் ஆகி விடுகிறார்கள்

நல்ல ஒலிபெருக்கிகளாக இருப்பது பெரிய விசயமல்ல அது வெறும் மைக்செட்

ஆனால் மைக்செட்கள் தங்களை ஞானவான்களாக கருதிக்கொள்ளும் ஆபத்து நேர்ந்துவிடுகிறது

இறைதூதர்கள் பூமிக்கு வரும்போதெல்லாம் அசுர ஆவிகளால் பீடிக்கப்பட்ட தீயவர்கள் கெடுதல் செய்ததை விட இறைவனுக்கு பூஜை செய்யும் தொழிலை செய்யும் பூசாரிமார்கள் செய்யும் கெடுதல் அதிகமாகவே இருந்திருக்கிறது

பூசாரிமார்களுக்கு யார் பலம் கொடுப்பது என்றால் ஆவிமண்டலத்தில் பிரஹஸ்பதி என்னும் குரு வியாழன் கிரகத்தின் அதிதேவர்

கோதை அக்கா ஒரு முக்கியமான ரகசியத்தை இங்கு சொல்கிறார் இதை சொல்லும் தகுதி மற்ற குருமார்களைக்காட்டிலும் கோதை அக்காவிற்கு உண்டு

அது ஏதென்றால் குருமார்கள் பலர் இன்னும் ஒளிசரீரம் பெற்று பரலோகம் போகாமல் பூமியில் பிறந்துகொண்டே இருக்க கோதை அக்கா ஒளிசரீரம் பெற்று பரலோகம் போனவர் வள்ளலாரைப்போல

அவர் சொல்கிறார் எனக்குள்ளாக மூழ்கி நான் பிரம்மம் என கண்டுகொண்டேன் நான் புனிதன் பரிசுத்தன் ஞானி நானே கடவுள் நான் குரு என்றெல்லாம் பகட்டிக்கொண்டிராதே பாவை நோன்பு நோற்ற கற்றுக்கொள்

நெய்யுன்ணாதே மையிட்டு எழுதாதே மலரிட்டு முடியாதே

பெருமையை பகட்டாதே சரணாகதியை தாழ்மையை கற்றுக்கொள்

ஆன்மீக பெருமை ஆன்மீக பகட்டுக்கு பின்னணி வியாழன் பிரஹஸ்பதி

சாகாக்கலை மரணமில்லா பெருவாழ்வு கற்றவர் யாரென்றால் சுக்ரன் வெள்ளி கிரகத்தின் அதிபதி

ஆன்மீக பகட்டாகிய வியாழம் மறைந்து வெள்ளி உதிக்கவேண்டும் பூசாரிகள் மதவாதிகளை கடந்து சென்றால் ஒழிய சாகாக்கலை கற்க முடியாது

இறைவனை தரிசிக்க முடியாது

சற்குரு இயேசு யூத குருமார்களை நோக்கி குற்றம் சாட்டினார் :

மத்தேயு 23:15 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்.

இறைவனுக்காக குருவே தவிர குருவுக்காக இறைவன் கிடையாது

பலர் குருபக்தியும் இறைபக்தியும் ஒன்றென பகட்டி குருவையே இறைவனாக ஆக்கி இணைவைக்கும் பாவத்தில் விழுந்து போகிறார்கள்


இந்த குற்றச்சாட்டு காலம் காலமாக பூசாரிகளைப்பற்றியது குருகிரகத்தின் ஆதிக்கத்தை கடர தெரிந்தால் ஒழிய சாகாக்கலை சித்திக்காது

ராஜராஜேஸ்வரியாய் அதிதேவர் நாராயணி யாரை அடக்கினார் மகிசாசுரனை அல்லவா

சுயமும் சுய பெருமையுமே ஆன்மீக செருக்குமே அந்த மகிசாசுரன்

பலர் ஏன் குருவையே இறைவன் என இட்டுக்கட்டுகிரார்கள் என்றால் குருவைப்போன்ற மனிதனையே அவர்கள் மகிமைப்படுத்த விரும்புகிறார்கள் அதில் மனிதனான தனக்கும் ஒருநாள் மகிமை கிடைக்கும் என்ற ஆசை ஒழிந்துகிடக்கிறது

இறைவனைக்காட்டிலும் தன்னைப்போல ஒரு மனிதனையே மகிமைப்படுத்தும் கள்ளம் அவர்கள் உள்ளங்களில் ஒழிந்து கிடக்கிறது . ஆனால் இறைவனுக்காகாத்தான் குருவை மகிமைப்படுத்துகிறோம் என பூசி மெழுகிக்கொள்கிறார்கள்

கள்ளம் தவிர்த்து இறைவனை மகிமைப்படுத்து என்பதே கோதை அக்காவின் அறிவுரை 





நாராயணன் நாமத்தினாலும் ஆதிசேஷனனின் நாமத்தினாலும் நாராயணியின் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் கடவுள் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் தமது அருளால் நிரப்ப வேண்டுகிறேன்

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி 

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி



Friday, November 25, 2016

திருப்பாவை 20






முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று 
கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்
செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்
செப்பென்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு    மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்


முப்பத்து  முக்கோடி தேவர்களைஅசுரர்கள் தங்கள் மாயைகளால் மயக்கி அடிமைப்படித்தி விட்டார்களாம் ஒரு  குறிப்பிட்ட  காலம் வரை இறை நேசம் கொள்வோருக்கும் எதற்கெடுத்தாலும்  சோதனைகளும் தடைகளும் முட்டுக்கட்டைகளும்  வந்து  குவியும் 

பட்டறிவில்லாத உபதேசங்கள்  பெரிய  பலன் கொடுக்காது

உழைக்களத்தில்  இரும்பு மேருகேற்றப்படுவது போல  வாழ்வில் அன்றாட சனத்தில் அசுர மாயைகளோடும்  தடைகளோடும் போராடி போராடி உரமும் பொறுமையும் நம்பிக்கையும் அடையாத  ஆத்மா ஞானமடையாது

முழு சரணாகதியை கற்றுக்கொள்ளாது 

அல்லாமலும் முற்பிறவிகளில் நாமும் செய்த அழிச்சாட்டியங்களுக்கு பதிலும் அனுபவித்தாகவேண்டும்

ஆகவே அசுரர்கள்  தேவர்களை அடக்குவது ஒரு குறிப்பட்ட காலம் வரை  தொடரவே செய்யும் 


ஆனாலும் அடிமைகளாக அல்லாடும் தேவர்களை விடுவிக்க  என்றே ஒரு அம்சம்  இருக்கிறது

அவர்  முருகன் தேவ சேனாதிபதி

பரமண்டலத்தில் ஆதியில் தேவர்களை ஆட்டிப்படைத்த அசுரர்களை அடக்கி விடுதலை கொடுத்தவர் முருகன்

ஆனால் கோதை நாச்சியாரோ தேவர்களுக்கு  முன் சென்று கப்பம்  தவிர்ப்பவர் நாராயணன் என்கிறார்

முருகன் பரலோகத்தில் நாராயணனே என ஆதி தமிழ் வேதங்கள் பல  இடங்களில் சொல்கின்றன . ஆனால் அவன் பூமிக்கு அவதாரமாக வந்தாலோ ஆதி மனிதனான சிவனின் பிள்ளை

ஹரிஹரன்


ஹரி = நாராயணன் + ஹரன் = சிவன்

நாராயணன் மனிதனாக அவதாரமெடுத்து வந்தால் அவன் ஹரிஹரன் ; முருகன்

அவதாரங்கள் அனைவரும் ஹரிஹரர்களே


ஹரிகரா   ஹரிகரா ஹரிகரா   என  கோசம் போட்டதே காலப்போக்கில் அரோகரா அரோகரா என மாறிவிட்டது 

சரி விசயத்துக்கு வருவோம்

கோதை அக்கா தமிழச்சி ஆயிற்றே ; அவளின் நேர்த்தியான அணுகுமுறை இப்பாடலிலும் வெளிப்படுகிறது

இந்த பாடலில் அவள் நாராயணனையும் அவளின் மனைவியையும்  துயில்

எழுப்புகிறாள்

ரெண்டு போரையும் சேர்த்தே  அழைக்கிறாள்

ஒருவன் மாணாளன் இன்னொருத்தியோ சக்களத்தி ; மதிக்க மாட்டாளே 


சக்களத்திக்கு என்னைய அடிமையாக்கதடா சாமி என்பதை பக்குவமாக சொல்கிறாள் ; முப்பத்து மூன்று  கோடி தேவர்களை அடிமைத்தளையிலிருந்து விடுவித்தவனல்லவா நீ என்கிறாள் 

செம்மையானவனே திறமையானவனே 

உன்னோடு ஒத்துப்போகிறவ்ர்களுக்கு  ஞான அக்கினியால் இருளை களைகிறவன்  நீ 

அப்புறம் சக்களத்திக்கே ஐஸ் ஐஸ்

நப்பினையின் அழகை வர்ணித்து ஐஸ் வைத்து உன் மணவாளனுக்கு ஊக்கமும் ஆக்கமும்  கொடுத்து  என்னை  அருளால் அபிஷேகிக்கும் படியாக  செய்வாயாக என்கிறாள்


அழகான நப்பினையின் மணவாளனே என்கிறாள்

தாயீ கோபப்பட்டிராத அவரு ஓம் புருஷன்தா உன் தயவு எனக்கு என்னைக்கும் வேணும் தாயீ

கில்லாடி அக்கா அணுகுமுறையில்கில்லாடியே





நாராயணன் நாமத்தினாலும் ஆதிசேஷனனின் நாமத்தினாலும் 
நாராயணியின் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் கடவுள் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் தமது அருளால் நிரப்ப வேண்டுகிறேன்

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி 

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி