Total Pageviews

Thursday, December 17, 2015

பள்ளியறை பூஜை





தேவர்களோ அதிதேவர்களோ தூங்குவதில்லை ; அங்கு ஆண் பெண் பேதமில்லை ; குடும்பம் இல்லை ஆனால் மனிதர்கள் தங்கள் உலக முறைமையின் படியாக பள்ளியறை ல் கொண்டுபோய் சிவனையும் அம்மையையும் தூங்க வைக்கிறார்கள் . இதற்கு ஒரு பூஜை வேறு என்ற கருத்து எனக்கும் இருந்தது  

நான் பலவேளைகளில் இந்த பூஜை நடக்கும்போது அதில் கலந்துகொள்ளாமல் அஞ்ஞானத்தை அறுக்கவே பிறவி எடுத்து வந்தவன் போலும் இருந்திருக்கிறேன்

ஆனால் அன்னை நாராயணியின் தாய்மை கிருபையை வைத்தே அசுரர்கள் தங்களை பலப்படுத்திக்கொள்கிரார்கள் இயங்குகிறார்கள் என்ற உண்மை புரிந்த பிறகே பள்ளியறை பூஜை யின் பலன் தெரிந்தது

ஏனென்றால் அசுரர்கள் எப்போதும் அன்னை நாராயணியை சிவனை விட்டு தனித்தவளாகவும் இன்னும் சிவனை மிதிக்கிரவளாகவுமே ஆக்கி வைக்க முயற்சிக்கிறார்கள் கலியுகம் முடிவு வரை நாராயணியும் அவர்கள் இழுக்கிற பக்கம் போவதுமுண்டு

இந்த வாய்ப்பை பயன்படுத்தி அன்னை நாராயணியை மட்டும் சிந்திப்பவர்களை அசுரர்கள் பதம் பார்ப்பதும் இடறல் கொடுக்கவும் முடிகிறது

ஆனால் சிவனையும் அன்னையையும் சேர்த்தே சிந்தித்தால் அது அசுரர்களுக்கு எதிர்ப்பாகவும் இடம் கொடுக்காததாகவும் ஆகி விடுகிறது அத்தகைய பக்தர்களை அசுரர்களால் பதம் பார்க்க முடிவதில்லை

ஒருமுறை நான் பலவகையான பிரச்சினைகளால் நெருக்கப்பட்டுக்கொண்டே இருந்தேன்

நானும் எவ்வளவோ பொறுமையாக பிரார்த்தித்துக்கொண்டே இருந்தேன் ஒன்றும் குறைந்தபாடில்லை

அப்போது தற்செயலாக ஒரு பள்ளியறை பூஜை நேரத்தில் சிவன் கோவிலில் இருந்தேன் .

18: வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும்உங்கள் திருமணக் கோலமும்சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்து என்னை ஆண்டபொற் பாதமும் ஆகிவந்து-
வெவ்விய காலன் என்மேல் வரும்போது-வெளி நிற்கவே.


அபிராமி அந்தாதியின் இப்பாடலின் அர்த்தம் ரகசியம் விளங்கியது

வெவ்விய அசுரர்கள் நம் மேல் வரும்போது அதிதேவர் சிவனும் அவரது இட பாகத்தை கைப்பற்றிக்கொண்ட நாராயணியும் ஆன இரு அதிதேவர்களின் திருமண கோலத்தை சிந்தை செய்யவேண்டும் . இது ஒரு ரகசியம்

அசுரர்களின் பலம் நாராயணியிடமிருந்து வருகிறது . அதில் நாராயணியை சிவனோடு இணைத்து சிந்தித்தால் அசுரர்களுக்கு பலம் செல்வது தடை செய்யப்படுகிறது . அப்போது அவர்களால் உண்டாகும் இடறல் நின்று போகிறது

31: உமையும் உமையொருபாகனும்ஏக உருவில் வந்து இங்கு
எமையும் தமக்கு அன்பு செய்யவைத்தார்இனி எண்ணுதற்குச்
யங்களும் இல்லைஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை,
அமையும் அமையுறு தோளியர்மேல் வைத்த ஆசையுமே.


32: 
ஆசைக் கடலில் அகப்பட்டுஅருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லற்பட இருந்தேனைநின் பாதம் என்னும்
வாசக் கமலம் தலைமேல் வலிய வைத்துஆண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுவேன்?- ஈசர் பாகத்து நேரிழையே.


37: கைக்கே அணிவது கன்னலும் பூவும்கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண் முத்துமாலைவிட அரவின்
பைக்கே அணிவது பண்மணிக் கோவையும்பட்டும்எட்டுத்
திக்கே அணியும் திரு உடையானிடம் சேர்பவளே.


38: 
பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும்பனிமுறுவல்
தவளத் திரு நகையும் துணையாஎங்கள் சங்கரனைத்
துவளப் பொருதுதுடியிடை சாய்க்கும் துணை முலையாள்--
அவளைப் பணிமின் கண்டீர்அமராவதி ஆளுகைக்கே.


39: 
ஆளுகைக்குஉன்தன் அடித்தாமரைகள் உண்டுஅந்தகன்பால்
மீளுகைக்குஉன்தன் விழியின் கடை உண்டுமேல் இவற்றின்
மூளுகைக்குஎன் குறைநின் குறையே அன்று,-முப்புரங்கள்.
மாளுகைக்குஅம்பு தொடுத்த வில்லான்பங்கில் வாணுதலே.


40: 
வாள்-நுதல் கண்ணியைவிண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியைபேதை நெஞ்சில்
காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியைகாணும்--அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணம் அன்றோமுன் செய் புண்ணியமே.


41: 
புண்ணியம் செய்தனமே-மனமே.- புதுப் பூங் குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடிநம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணிநம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே.


புதுப் பூங் குவளைக்கண் உடைய நாராயணியும் அவரது செம்மையான கணவரும் நம்மைத்தேடி வந்து அடியார்கள் கூட்டத்திலே நம்மை சேர்த்து நம் உச்சந்தலையில் இருவரும் பாதம் பதிக்கவேண்டுமாம் . அதற்கு நாம் புண்ணியம் செய்திருக்கவேண்டும்


குண்டலினியை ஏற்றுகிறேன் ஏற்றுகிறேன் என்று சொல்லிக்கொண்டும் முயற்சித்துக்கொண்டும் யோகிமார்கள் பலர் அலைகிறார்களே அவர்கள் மீது எனக்கு கொஞ்சம் பரிதாபம் வருவதுண்டு . என்ன முயற்சித்தாலும் அது உச்சந்தலைக்கு வரப்போவதுமில்லை ; ஞானம் விளையப்போவதுமில்லை ; நாடி நாடி தேடியே நாட்களும் போயின ; போகும்

அதிதேவர்கள் நம் சென்னியில் பாதம் வைத்தாலோ அந்தக்குண்டலினி தானாக வந்து சகஸ்ரத்தில் தங்கும் . ஞானசூன்யங்களான பக்தர்களுக்கு தானே குண்டலினி எழும்புவதும் ஞானபக்தியோகம் விளைவதும் உண்மையானது அனுபவித்தவர்க்கே புரியக்கூடியது

மகாகுரு ராமகிருஷ்ண பரமஹம்சர் அமுத மொழிகளை பருகியோர் மனிதனின் சிறு சிறு அஞ்ஞானத்தை எவ்வளவு உணர்த்தும் என்பதை அறிவார்கள் பக்தியோகிகளே பிறவிக்கடலை கடரவும் தன்னை உணர்ந்து தூய்மை அடையவும் முடியும்

நவீன நாத்திகவாதிகளான யோகாப்பிசயக்காரர்கள் நான் கடவுள் நான் கடவுள் என்று பிதற்றிக்கொண்டு திரிவதைத்தவிற ஒன்றையும் அறியப்போவதில்லை

89: சிறக்கும் கமலத் திருவேநின்சேவடி சென்னி வைக்கத்
துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும்துரியம் அற்ற
உறக்கம் தர வந்துஉடம்போடு உயிர் உறவு அற்று அறிவு
மறக்கும் பொழுதுஎன் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே.


துறக்கம் சகல பலகீனங்களையும் துறந்தால் ஒழிய சித்தி உண்டாகப்போவதில்லை ; அதைத்தர சிவனும் நாராயணியும் சேர்ந்து வரவேண்டும் . அப்போது துரியத்திலே குண்டலினி நின்று சமாதி நிலை சித்திக்கும் . இந்த சமாதி நிலையில் மட்டுமே அறிவு விழிப்படைந்து மெய்ஞானத்தை உணரத்தொடங்கும் . துறக்கமான சித்தி வரை இந்த பயிற்சி நீளும்போது மட்டுமே உயிர் உறவு அற்றுப்போகாத மரணமில்லா பெருவாழ்வு நோக்கி முன்னேற முடியும்

துரியத்திலே குண்டலினி நின்றால் சமாதி கிட்டும் .இந்த சமாதி என்பது நமது சரீரத்தை நமது இருப்பை கடந்த ஒரு நிலை . ஏறக்குறைய உறக்கம் போலத்தான் . துரியத்துடன் கூடிய உறக்கம் சமாதி நிலை இந்த நிலையில் உயிரும் ஆத்மாவும் உறவில் ஆழ்ந்து நான் சரீரம் என்ற உணர்வு கடரும் அறிவு விழிப்படையும்   துரியம் அற்ற உறக்கமோ மரணம் .உயிர் ஆத்மா உறவு அற்று போய்விடும் அறிவும் மறக்கும் . இவையெல்லாம் சம்பவிக்காமல் இருக்கவேண்டுமானால் இரண்டு அதிதேவர்களும் இணைந்து நம் முன்னே வரவேண்டும்


63: தேறும்படி சில ஏதுவும் காட்டிமுன் செல்கதிக்குக்
கூறும் பொருள்குன்றில் கொட்டும் தறி குறிக்கும்--சமயம்
ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்,
வேறும் சமயம் உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே.


சமயங்கள் மார்க்கங்கள் எப்படிப்பட்டவை என்றால் தேறும்படி சில ஏதுவுகள் காட்டுபவை மட்டுமே . நம்மை குன்றின் உச்சிக்கு கொண்டுபோய் சேர்க்கும் இத்தகைய மார்க்கங்கள் சமயங்கள் ஆறு உள்ளன . உலகில் இதுவரை வந்த சமயங்கள் அனைத்தையும் ஆறு பிரிவுகளுக்குள் அடக்கிவிடலாம் என்பதை ஆதிசங்கரர் தெளிவாக இலக்கணம் வகுத்து சண்மார்க்கங்கள் என்றார் .வள்ளலாரும் இனி சமரச சண்மார்க்கமே உலகெங்கும் தழைக்கும் என்றார் 

இந்த ஆறு மார்க்கங்களின் குருமார்கள் எல்லோரும் முருகனின் அடையாளமாவர் . ஆகவேதான் முருகனை சற்குருநாதா ஆறுமுகா சண்முகா என்றனர்


அபிராமி அந்தாதி சொல்கிறது ; இந்த ஆறு சமயங்கள் அனைத்திற்கும் தலைவி அன்னை நாராயணியே என்கிறது . அதுவே வாலை எனப்படும் பாலாம்பிகையின் கையில் உள்ள சமரசவேதமாகும் . அனைத்து வேதங்களும் சமரச வேதத்தில் ஒருங்கிணையும் ; வேற்றுமையில் ஒற்றுமை உருவாகும் . மதங்கள் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டவை என்றும் தங்கள் மதமே பெருசு என்று கூப்பாடு போடுபவர்கள் வீணர்கள் ஆவார்கள் என்றும் அபிராமி அந்தாதி தீர்க்கதரிசனம் உரைக்கிறது


நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய

ஆதிசேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ ஆதிசேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி