Total Pageviews

Sunday, August 30, 2015

ப்ரதோசம்



பிரதோஷ வழிபாடு முதன்முதலில் ஆந்திர – தமிழக எல்லையிலுள்ள சுருட்டப்பள்ளி கிரமத்தில் தோன்றியது என்பதை பலரும் அறிவோம்

பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்த பொழுது அதிலிருந்து முதலாவது நஞ்சு உண்டானது

அதை சிவன் உண்டார் . அந்த நஞ்சு அவரின் தொண்டையில் நிற்கும்படியாக நாராயணி தம் கையால் சிவனின் கண்டத்தை பிடித்து நிறுத்தி அதை அமுதமாகவும் மாற்றினார் ஆனாலும் அதற்குள் அந்த நஞ்சு அவரது கண்டத்தில் பாதிப்பை உண்டாக்கி அது நீலமானதால் சிவனை திருநீலகண்டர் என்பார்கள் .

அந்த பாதிப்பு அவாது சரீரத்தில் தோஷத்தை உண்டாக்கியதால் கொஞ்சம் மயக்கமுற்றார் . அதனால் அவர் நாராயணியின் மடி மீது தலை வைத்து கொஞ்சம் படுத்து தன்னை ஆசுவாசப்படுத்திய இடம் இந்த ஊர் என்கிறார்கள் நஞ்சு அவரை சுருட்டி படுக்க வைத்ததால் சுருட்டப்பள்ளி

அவர் அவ்வாறு ஓய்வெடுத்தபோது தேவர்களும் முனிவர்களும் அவரை சூழ்ந்தனர் நாராயணனும் அங்கு வந்துவிட்டார் . ஆதிசேஷன் முருகனாகவும் கணபதியாகவும் அங்கு வந்துவிட்டார் . இப்படி நான்கு அதிதேவர்களும் அங்கு ஒன்று சேர்ந்து தேவர்களுடன் என்ன செய்திருப்பார்கள் . அவர்களை விட உன்னதமான அருப ஏக இறைவனை தோஷம் போக வழிபட்டனர்

சிவனுக்கு நஞ்சினால் உண்டான தோஷத்தை போக்க அவரது சரீரமான நந்திக்கு பல வகையான. உயர்ந்த வஸ்துகளை தேவர்கள் வார்த்தார்கள் . பிரதோசத்தன்று நந்திக்கு பால் பஞ்சாமிர்தம் சந்தானம் பல வகையான வாசனை திரவியங்களை வார்த்து அபிஷேகம் செய்வதைப்பார்த்திருப்பீர்கள் .

தோஸத்தை போக்குவதே பிரதோசம் ப்ரதோஷம் என்பதே சரியான உச்சரிப்பு பரத்தில் உள்ள உயர்ந்த சக்திகள் அதாவது அதிதேவர்கள் நால்வருள் ஒருவரான சிவனுக்கு விசத்தால் உண்டான தோஷத்தை மற்ற தேவர்கள் பிரார்த்தனையோடு உயர்ந்த வஸ்த்துகளை சிவனின் சரீரத்திற்கு வார்த்து தோஷத்தை நீக்கினார்கள் .

பரத்திலே நடந்த இந்த நிகழ்வு மனிதர்கள் அனைவருக்கும் அன்றாட வாழ்வில் உண்டாகும் தோஷங்களுக்கு அடையாளமாகும்

சரீரம் தோசமடைவதை தவிர்க்க இயலாது . அப்படியே விட்டால் அசுத்தங்கள் மாயைகள் இருள்கள் மனிதனில் வளர்ந்து அவனை கேட்டுக்குள் ஆழ்த்தி விடும்

மனிதர்கள் தங்கள் சரீரமான நந்தியை குறைந்தது மாதம் இரண்டு முறையாவது சிவன் கோவிலுக்கு கொண்டு சென்று அருள் சக்தியை ஏற்றவேண்டும். பிரதோசத்தன்று நந்திக்கு செய்யப்படும் அபிஷேகங்களை கண்ணால் காணும்போது அந்த நறுமணம் நம் மனதில் ஏறும்

சரியை எனப்படும் மார்க்கம் மிக. எளிமையானது பிரார்த்தனை வழிபாடு தினமும் செய்யாதவர்கள் கூட. மாதம் இருமுறை பிரதோசத்தை கண்டால்போதும் அங்கு நறுமணப் பொருட்களால் நந்தி அபிஷேகப்படுவதை கண்டால் அந்த. நற்குணங்கள் ஆத்மாவில் வளரும்

நந்தியின் கொம்பின் ஊடாக சிவனை தரிசிக்க வேண்டும் என்பது மனிதன் தலையில் உள்ள இரண்டு சக்கரத்தை குறிப்பிடுகிறது . இவை அருள் மைய சக்திகள் . இந்த சக்கரங்கள் உணர்வடைவது அருளுலக தொடர்பையும் ஆசியையும் கொண்டுவருவது . சகஸ்ரம் ஆக்ஞை என்பவைகளின் வழியாக தியானம் செய்யவேண்டும் என்பதை குறிப்பால் உணர்த்தவே நந்தியின் கொம்பின் ஊடாக சிவனை தரிசிக்க வேண்டும் என்றார்கள்

மனித சரீரத்தில் மட்டுமே குண்டலினி எனப்படும் ஞான சக்தி மூலாதாரம் என்ற சக்கரத்தில் இருக்கிறது . ஆகவேதான் மனித பிறப்பு எடுக்காமல் நாம் ஞானமடையவே முடியாது . மரணமில்லா பெருவாழ்வு பெறுவதற்கான ஒளி சரீரத்தை அடைய முடியாது . அதற்கு சரீரத்தின் தோஷத்தை ஒவ்வொன்றாக உணர்ந்து தெளிந்து கடர வேண்டும் . பரத்திலிருந்து வரும் அருள் சக்தியின் துணை  கொண்டு பிறவிக்கடலை கடரவேண்டும் .

அதற்கு அதிதேவர்கள் நால்வரின் ஆசிர்வாதம் மிக அவசியம் . ஒவ்வொரு அதிதேவர்களுக்கும் என்று தனித்தனியே குருமார்களும் சீடர்களும் மார்க்கங்களும் உள்ளன . இவை ஒரு ஆத்மாவை அடிமட்டத்திலிருந்து உயர்த்த மட்டுமே பயன்படும் ; ஆனால் முழுமையடைய உதவாது . ஓரளவு பக்குவம் . உயர்வு உண்டான பிறகு மற்ற மார்க்கங்களின் உண்மையை ஞானத்தை உள்வாங்க வேண்டும் என்ற முயற்சி வந்தால்போதும் ; அந்த மார்க்கங்களை எளிதில் உணர்ந்து கொள்ளமுடியும்

உதாரணமாக அந்தந்த துறையில் படித்தவர்களை அந்தந்த துறையில் வேலைக்கு வைப்பார்கள் . ஆனால் அந்த எல்லா துறைகளையும் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித்தலைவரின் கீழேயே பணியாற்ற வைப்பார்கள் . இதற்கு குடிமைப்பணித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே நியமிப்பார்கள் .

மிக உயர்ந்த தேர்வான ஐ . எ . ஸ் ல் தேர்ச்சி பெற்றவர்களால் சகல துறைக்கும் தலைமை தாங்கும் பக்குவம் வந்துவிடுகிறது என உலகில் சகல அரசாங்களும் வைத்துள்ளன . கலெக்டர் பதவிக்கு மேல் அவர்கள் ஒவ்வொரு துறையாக பணி செய்து எல்லா பக்குவமும் பெற்ற பிறகு சகல அரசுத்துறைக்கும் செயலாளர்களாக இவர்களே இருக்கிறார்கள் .

இதுபோலவே ஆன்மீக உலகமும் . ஒவ்வொரு மனிதனும் ஏதாவது ஒரு மார்க்கத்தின் குருமார்களிடம் கற்றுத்தேர வேண்டும் . ஆனால் அதுமட்டுமே உயர்ந்தது ; உன்னதமானது என்பதுபோலத்தான் தோன்றும் . அப்படித்தான் அந்த சீடர் கூட்டங்கள் புளகாங்கிதம் அடைந்து தங்கள் குருவை போற்றி புகழ்ந்து கொண்டிருப்பார்கள் .

ஒரு துறை படிப்பு மட்டுமே படித்து அந்த துறையில் மட்டுமே பணியாற்றுகிறவர்கள் கலெக்டர் பதவிக்கு கீழே மட்டுமே பணியாற்றி ஓய்வு பெற்று விடுவார்கள்

ஆனால் கலெக்டரோ பல துறைகளிலும் பணியாற்றி சகல துறைக்கும் தலைவராவார்

இதுபோலவே ஒரு குருவை மட்டுமே துதி பாடிக்கொண்டு இருக்கும் கிணற்றுத்தவளைகள் முழுமையை அடையவே முடியாது

ஒரு குருவிடம் கற்ற கல்வியால் சகல குருமார்களின் உபதேசங்களை உள்வாங்கும் திறமையை அடையவேண்டும் . அப்போது முழுமையை நோக்கிய வாசல் திறக்கும்

இதுவே சமரச வேதம் . உலகில் வர உள்ள வேதம் .

பள்ளிகொண்டீஸ்வரரின் சந்நிதியில் இந்த நான்கு அதிதேவர்களும் ஒன்றாக உள்ளனர் . சிவனின் தோஷத்தை போக்குகின்றனர்

இந்த நால்வரின் நாமத்தினால் மட்டுமே இறைவனை முழுமையாக தரிசிக்கும் வழி திறக்கப்படும்

பாற்கடலை கடைவது என்பது மனிதனாக பிறந்த ஒவ்வொரு ஆத்மாவும் இந்த பிரபஞ்ச வாழ்வில் பல பிறவிகள் எடுத்து பாவம் புண்ணிய, செய்து மரணமில்லா பெரு வாழ்வு பெற்று பரலோகத்தில் நுழைவதற்குத்தான் . தேவ சக்திகளால் நற்செயலும் அசுர சக்திகளால் பாவ செயல்களும் ஒரே மனிதனின் மூலமாகவே உலகில் வெளிப்படுகிறது .

அந்த வாழ்வில் அமிர்தம் கிடைக்கும் முன்பு நிச்சயமாக விசமே வெளிப்படும் . மனித வாழ்வில் பாவச்செயல்களே கூடி ஒருவனை துக்கசாகரத்தில் ஆழ்த்தும் . அவ்வாறு துக்கப்பட்ட ஆத்மாக்களே விடுதலை தேடி ஆன்மீக வாழ்வுக்குள் நுழைந்து முன்னேறுகிறார்கள்

பாவம் முற்றாமல் அந்த பாவத்தைப்பற்றி தெளிவடைய முடியாது . தெளிந்து இது அவசியமில்லை என பக்குவம் உள்ளே விழைந்து வைரம் விழைந்தால் மட்டுமே ஞானம் சந்தனமரத்தைப்போல மனம் வீசும் . விசத்தை கடரும் பக்குவமே அமிர்தமாக மாறும் .

மனிதனை சுருட்டும் அஞ்ஞானம் என்ற தோஷத்தை நால்வரின் குருகுலம் என்ற சமரச வேதம் மட்டுமே வென்று முழுமையடைய வைக்கும் .

பிரதோஷம் முதன்முதலாக தோன்றிய சுருட்டப்பள்ளி யின் நிழலைப்போல இன்று எல்லா சிவன் கோவிலிலும் பிரதோஷ வழிபாடு நடக்கிறது . அதில் சாதாரன மனிதர்கள் பக்குவம் அடைவார்கள் .

எதையும் தங்கள் அஞ்ஞானத்தின் கற்பனைகளை ஏற்றும் மனிதர்கள் நந்தி என்ற வாகனத்திற்கு சிவன் உபதேசம் செய்தார் என்றும் அவரை வழிபட்டால் மட்டுமே சிவனின் கிருபை கிடைக்கும் என்றும் கற்பனையை பரப்பி விட்டார்கள் .

மனிதன் என்ற ஆத்மா வாழவேண்டுமானால் அவனுக்கு சரீரம் இருக்கவேண்டும் . சரீரம் இல்லாமல் ஆத்மாவால் தனித்து இயங்க முடியாது . ஒரு பிறவியில் மரணத்தை தழுவும் ஆத்மா இன்னொரு பிறவியில் ஒரு சரீரத்தை அடைந்தே மீண்டும் பாவபுண்ணியத்தை தொடரமுடியும் . ஆக மனிதனே நந்தி வாகனன்

முதலாவது மனித ஆத்மாவான சிவனே உலகின் முதல் நந்தி வாகனன் . அர்த்தனாரியான சிவனும் பார்வதியும் நந்திவாகனனாக கோவிலை இடவலமாக சுற்றி வருவார்கள் . அப்போது தெற்கு நோக்கி தட்சினாமுர்த்தி முதலில் வருவார் . இதில் இவர் மனித வாழ்வில் அடைந்த உன்னத அனுபவத்தால் மனிதனாக குருவாக உபதேசிப்பார் . சுருட்டப்பள்ளியில் அவர் மனைவி அவரை இடப்புறத்தில் பின்னிருந்து தழுவிய வடிவில் அற்புதமாக உள்ளார்  சிவனின் உபதேசங்களின் சாரம் குருகீதை



அதில் அவர் தனது குருவாக நாராயணனை குறிப்பிடுகிறார் . அடுத்து வரும் யுகங்களில் நாராயணன் சிவகுமாரனாக மனித அவதாரம் எடுத்து வருவார் . அவர் தேவன் என்ற நிலைமையை மாற்றி மனிதன் என்ற நிலைக்கு முருகி வருவதால் முருகன் . அவனின் வழிநடப்போர் முழுமையடைவார்கள் என்பதே குருகீதையின் சாரம்

அடுத்து மேற்கே லிங்கோத்பவர் இருப்பார் . சிவன் லிங்கமாக வெளிப்பட்டார் என்பதால் அவர் லிங்கோத்பவர் . அந்த லிங்கத்தில் ஒரு வடுவை உண்டாக்கி அதில் சிவன் நிர்பதாக சித்தரிக்கப்பட்டிருக்கும் . அதாவது மனிதன் என்ற நிலையில் இருந்து தான் சரீரமல்ல ஆத்மா என்ற பரிபக்குவத்தை சிவன் அடைந்தார் என்பதே இதன் வெளிப்பாடு

எந்த மனிதன் தான் சரீரமல்ல ; பல பிறவிகளாக பல சரீரத்தில் இருந்திருக்கிறோம் ஆனால் எப்பிறவியிலும் அழியாத ஆத்மாவே தான் என்பதை உணர்கிறானோ ; தன்னை ஆத்மசொருபியாக உணர்கிறானோ அவனே மெய்ஞானத்திற்குள் பிரவேசித்தவன் .

மனிதன் ஜீவாத்மா என்றால் அந்த ஜீவாத்மாக்கள் எல்லாவற்றையும் தன்னகத்தே அடக்கி வைத்துள்ள பரமாத்மா ஒன்று உள்ளதல்லவா அவரே சற்குரு . அவரே நாராயணன் . எந்த சிவன் கோவிலிலும் மேற்கு பக்கத்தில் லிங்கோத்பவர் இருப்பார் என்றால் அந்த இடத்தில் நின்று நிமிர்ந்து மேலே பாருங்கள் ; விமானத்தில் நாராயணன் இருப்பார் . இன்று நேற்றல்ல ஆதி காலத்திலிருந்தே கருவறையின் விமானத்தில் மேற்கே நாராயணனை சிலையாக வைத்திருப்பார்கள் . கோவிலை கட்டுபவர்களை ஸ்தபதிகள் என்பார்கள் . இவர்கள் வாழையடி வாழையாக கோவில் கட்டும் தொழில் உபதேசத்தை கற்று வருவார்கள் . யாரையும் கேட்காமலேயே ஆகம விதிப்படி சிவன் கோவிலின் விமானத்தின் மேற்கே நாராயணனை வைத்துவிடுவார்கள் . இதன் அர்த்தம் ஆத்மாவாகிய சிவனுக்கு சற்குரு நாராயணன் ஆகிய பரமாத்மா என்பதே


ஆனால் மனிதனின் அஞ்ஞானம் சிவன் கோவிலில் நாராயணனை வைத்துக்கொண்டே சிவன்தான் பெரியவர் என்று வைணவர்கள் பலரின் மண்டையை உடைத்து ரத்த ஆற்றை ஓட வைத்ததுதான் .

அப்படியே வடக்கு வந்தால் அங்கு விஷ்ணுதுர்க்கை இருப்பார்கள் . அம்மன் சந்நிதியும் இருக்கும் . துர்க்கையை மாரியம்மன் என்று அழைப்பார்கள் . ஆதியில் சிவனின் பாதியாக வந்த பார்வதி தட்சனின் யாகம் தொடர்பாக தீயில் விழுந்து மாண்டாள்

ஆப்ரகாமிய வேதங்களில் ஆதி மனிதனான ஆதம் என்ற சிவனை முதலாவது பாவத்தில் அவ்வா ஆகிய பார்வதி இழுத்து விட்டதால் ஆண்பெண் பேதம் தொடர்பான சாபம் உண்டானது என்பதாக உள்ளது

அதன்பிறகு சதா தியானத்தில் ஆழ்ந்த சிவன் கடவுளுக்கு இணையானவராக கடவுளின் அங்கீகாரம் கிடைத்தது . ஆனால் அந்த முதல் பெண்ணான பார்வதி தற்கொலை செய்துகொண்டாள் என்பது இந்துவேதம்

அதன்பிறகு சிவன் கடும் தவத்தால் லிகோத்பவராக ஆத்மசொருபியாக மாறினார் . இப்போதோ அவர் ஆண்பெண் பேதமில்லாத ஆத்மசொருபி . மறுபுறமோ உலக மாந்தர்களுக்கு அம்மா இல்லை ; தாயற்ற பிள்ளைகளாக இருந்தார்கள் . அப்போது அவர்களுக்கு தாயாக அதே பார்வதியின் ரூபத்தில் அன்னை நாராயணி தீயிலிருந்து வெளியே வந்தாள் ; சிவகாமியாக சிவனை நேசித்து இணையானாள் . ஏனென்றால் சிவன் மனிதன் என்ற நிலையிலிருந்து தேவர் என்ற தகுதி பெரும் பக்குவத்தை அடைந்துவிட்டார் என்பதால் நாராயணனே நாராயணி என்ற வியாபகமாக அதிதேவராக பூமியில் தீயின் மூலமாக வெளிப்பட்டு சிவனின் மனைவியானார் . அதனால்தான் அவள் விஷ்ணுதுர்க்கை , மாறியம்மாள்




உலக மாந்தர்களுக்கு. தங்கள் தாய் தீயிலே மாண்டாள் ; அவள் மீண்டும் தீயிலிருந்து வெளியே வந்தாள் ; ஆனால் வந்தது மாண்டுபோன பெண்ணான பார்வதியல்ல ; நாராயணி என்ற அதிதேவர் பார்வதியைப்போல மாறி வந்ததால் அவள் மாறியம்மா . மறுவி வந்ததால் மாறியம்மா .  மாரியம்மா . நாராயணனே சிவகாமியாக சிவன் கோவிலில் இருக்க வைணவர்கள் தங்கள் அஞ்ஞானத்தால் சைவர்களின் மண்டையை உடைத்து ரத்த ஆற்றை ஓட வைத்தார்கள் என்பது மனிதநிலை

இப்படித்தான் இந்த மார்க்கவாதிகள் தங்கள் உபதேசங்களில் உள்ள உபதேசங்களை சிலாகித்து இதுமட்டுமே உண்மை என்ற அஞ்ஞானத்தில் விழுகிறார்கள் . கடவுளும் பரமும் உலகம் முழுவதும் செயல்படுகிறார்கள் ; எங்கும் வந்துள்ள வேதங்களில் கடவுளின் உண்மை ஏதாவது வெளிப்படாமல் இல்லை என்பதை நிதானிக்கதவறி மனித கொடுமைகளை அரங்கேற்றுகிறார்கள் . ஆனால் வர உள்ள சமரச வேத்தத்தின் அதிதேவர் நாராயணியின் காலம் வந்துகொண்டுள்ளது . அவளின் வேதம் அதற்கான இறைதூதர் வல்லமையோடு வெளிப்படும்போது எங்கும் சமாதானம் நிரம்பி வழியும் . கலியுகம் முடியும் முன்பு அந்த சமாதான தூதர் வருவார் என்று முகமதுநபி கூட சாகும் முன்பு அவரது கனவில் அறிவிக்கப்பட்டது . உலகை மூழ்கடிக்கும் ஆன்மீக பேரலையை வெளிப்படுத்த உள்ளவள் வாலை எனப்பட்ட கன்னியாகுமரி தாய் என்பதை உணர்ந்தே விவேகானந்தரும் அவள் காலடியில் அமர்ந்து வேண்டிக்கொண்டார்

அடுத்து வடகிழக்கு மூலையில் பைரவர் இருப்பார் . இவர் ஆடை இல்லாமல் இருப்பார் . நாய் வைத்திருப்பதால் பைரவர் என்று கதையை கட்டிவிட்டார்கள்



உண்மை எதுவென்றால் அவர் வைரவர் . வைரம் அழிவற்றது ; ஒளி உமிழும் தன்மையுள்ளது . பிள்ளையார்பட்டி அருகில் வைரவன்பட்டி என்ற ஊரில் வைரவர் கோவில் உள்ளது . எதையும் தமிழில் சொன்னால் மட்டுமே முழுமையான ஆன்மீக அறிவை பெறமுடியும் . அழிவில்லாத ஒளி சரீரத்தை சிவன் அடைந்து பரலோகம் சென்றார் ; அங்கு அவருக்கு ருத்ரபதவி கொடுக்கப்பட்டது . அதிதேவர் ஆனார் . அந்த கோவிலில் சிவனுக்கு பெயர் வளர்ஒளிநாதர் . ஆத்மாவில் ஞானத்தை பெருக்கி உள்ளொளி வளர்ந்தால் இந்த அழியும் சரீரம் அழிவில்லாத ஒளிசரீரமாக மாறும் . அதுவே மரணமில்லாபெருவாழ்வு என்பது வள்ளலாரும் செயலில் காட்டிய ஒன்றல்லவா ?

இந்த உபதேசங்களை மனிதர்கள் தங்கள் சிந்தையில் ஏற்றி தலையில் உள்ள இரண்டு சக்கரங்கள் மூலமாக தியானத்தில் நிலைத்து அதிதேவர் சிவனை நினைத்தால் அவர் நமது சரீரத்தில் உள்ள அனைத்து அஞ்ஞானம் என்ற தோஷத்தை போக்கி இறைவனோடு நம்மையும் ஒப்புரவாக்குவார் . அவர் ஒளிசரீரம் அடைந்து பரலோகத்தில் நுழைந்ததுபோல நம்மையும் மரணமில்லாபெருவாழ்வுக்குள் நுழைவிப்பார்


நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய

ஆதிசேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ ஆதிசேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி