Total Pageviews

Tuesday, August 4, 2015

ஆடிபெருக்கு - 2015

ஆடிபெருக்கு நன்னாளை ஒட்டி நிறைய மனிதர்கள் முன்னெப்போதையும் விட தெய்வத்தை நாடி சென்று வழிபட்டதை இன்று காணமுடிந்தது

எங்கள் குலதெய்வ கோவிலிலும் பூசைப்பணியை தொண்டாக செய்யும் சகோதரர் மாலை ஐந்து மணி வரை கோவிலிலிருந்து விட்டு ஒரு நிகழ்வுக்கு செல்வதால் மாலை ஆறு மணிக்கு அங்கு வருவதாக சொல்லியிருந்தேன்

ஸ்ரீமது பாலத்தாயம்மன் கோவில் கட்டுமானப்பணிகளும் ஏறக்குறைய நிறைவடையும் தருவாயை நெருங்கிக்கொண்டுள்ளது 









சமாதானத்திற்கான காலம் நெருங்கி வருவதால் கடவுள் அதற்கான அதிதேவர் நாராயணியின் செயல்பாட்டை அதிகம் பெருக்கும்படியாக அதிகாலை பிரார்த்தனையை சிலநாட்களாக ஏறெடுத்தும் வருகிறேன்  

என் சொந்த குடும்பத்தில் ஐந்து சகோதர்களில் எனக்கு மூத்தவர் என்னோடு பிணங்கி இருப்பதும் அவரது மகளின் திருமணத்திற்கும் அழைக்காததுமான நெருடளிலும் சாந்தி உண்டாக்கும்படியாக இன்று காலை வேண்டியிருந்தேன்

மாலை ஆறு மணியளவில் அங்கு போய்ச்சேர்ந்தபோது என்னை எதிர்பார்த்து காத்திருந்த சிலரின் முகமலர்ச்சி என்னை வரவேற்றது . இத்தனை அத்துவான காட்டில் வெகு நேரம் தங்கியிருக்க முடியாது என்பதே அதற்கு காரணம்

அவர்களனைவருக்காகவும் பாலத்தாய் மூலமாக இறைவனிடம் பூசை செய்வித்து ஆசிர்வத்தித்து அனுப்பிவிட்டு கொஞ்சம் பிரார்த்தனையில் தரித்திருந்தேன்

அப்போது வண்டி சத்தம் கேட்டு வெளியே பார்த்தால் எனக்கு மூத்தவர் அங்கு வந்தார் . 2௦௦௦ ம் ஆண்டு வாக்கில் என் முதல் அண்ணனுக்கும் இவருக்கும் எனது தந்தையாரால் உருவாக்கப்பட்ட நடுநிலைப்பள்ளி உரிமை தொடர்பாக உண்டாகும் பிணக்கு உச்சத்தை அடையும் முன்பு சகோதரன் ஒருவன் அநியாயமாக சொத்தை அபகரிக்க முயற்சித்தாலும் அதற்காக வம்பு வழக்கு செய்யாதே என இவரை கண்டித்ததால் என்னை அவரின் கையாள் என்பதாக என்னுடன் பேசுவதை விட்டுவிட்டார்

என் தந்தையார் மரணப்படுக்கையில் இருக்கும்போது நான் திருமனமற்றவனாக இருந்தேன் . என் தகப்பனார் இறுதியை நெருங்குவதாக உணர்ந்தபோது இப்பள்ளி தொடர்பாக பெரும் பூசல்கள் என் சகோதரர்களுக்குள் உண்டாகி பெரும் நட்டப்படுவார்கள் என பயந்து என் தந்தையிடம் பள்ளி சிறப்பாக நடக்க அவருக்கு மனதுக்கு உகந்த ஒருவருக்கு உயில் செய்து வைத்து மற்ற சொத்துகளையும் உயில் செய்யும்படியாக பல முறை வேண்டினேன்

அவருக்கு மிக நீண்ட காலம் பொதுக்குடும்பத்தில் கைகொடுத்தவரும் ; தற்போதே தகப்பனுக்காக பள்ளியை நிர்வகிக்கிரவருமான முதல் மகனுக்கு பள்ளியை கொடுக்க விருப்பம் இருப்பினும் அதற்கு மற்ற சகோதரர்களுக்கு போதிய அளவு ஈடு செய்ய வாய்ப்பு இல்லாத சூழ்நிலை ; ஆகவே விதிப்படி நடப்பது நடக்கட்டும் என்று சொன்னார் – கடந்தும் சென்று விட்டார்

பயந்தபடியே நிகழ்வுகள் அரங்கேறின ; சகோதர்களுக்குள் சொத்துக்காக வம்பு வழக்காடி நேரத்தையும் பணத்தையும் உழைப்பையும் விரையமாக்குவதை விட நாம் விட்டுக்கொடுத்து விலகிச்சென்றால் இறைவன் நாம் இழந்ததை பல மடங்கு வேறு வகையில் நமக்கு கொடுப்பார் – பங்காளி சண்டை அழிவில்தான் முடியும் என்ற என் கருத்தை யாரும் ஏற்காததால் நான் விலகி எனக்கு நிழல் தந்த என் மாமனார் ஊருக்கு குடி பெயர்ந்து விட்டேன்

ஆனாலும் பணத்தையும் நிம்மதியையும் இழந்து திரிகிறார்களே வீணே வக்கீலுக்கு படியளக்கிரார்களே என்ற ஆதங்கம் உண்டு . சில ஆண்டுகளில் மற்ற இரு சகோதர்கள் என் சொல் கேட்டு விலகிக்கொள்ள தந்து தரப்பை தம்பி பலகீனப்படுத்தி அண்ணனுக்கு கையாளாக இருக்கிறான் என்றே மென்மேலும் என்னை வெறுக்கும் சூழ்நிலை உண்டாகிக்கொண்டது

அந்த பள்ளியின் மதிப்பை விட இரண்டு மடங்கு செலவு செய்து தோல்வியும் பத்து மடங்கு செலவு செய்து வெற்றியும் என வழக்கு முடிவுக்கு வந்தது .

பாவப்பட்ட குடும்பத்தில் மதி எச்சரித்தாலும் விதியிலிருந்து தப்ப முடிவதில்லை

விட்டுக்கொடுப்பவன் கெட்டுப்போவதில்லை
கேட்டுப்போபவன் விட்டுக்கொடுப்பதில்லை என்ற பழமொழி இறைவன் அறிவளித்தால் ஒழிய நமக்கு புரியப்போவதில்லை

ஆனாலும் சமாதானம் உண்டாக்க இறைவனால் எத்தருணத்திலும் முடியும்

அவர் வருவதைப்பார்த்து வெளியே வந்து வா அண்ணா என்றேன் ; பொங்கி வந்த அழுகையை அடக்கிக்கொண்டு தலையை குனிந்துகொண்டு கோவிலுக்குள் நுழைந்தார் . அவரின் மன நிலை – அவருக்கிருந்த நியாயத்தை நான் மதிக்காமல் போனேன் என்பதாக கூட இருக்கலாம் . ஒப்புரவு இல்லாத நிலையில் பூசை செய்வது தகாது என்பதாலும் இறைவன் தன் மகத்துவத்தை தாழ்த்தி இறங்கி வந்து தொடர்பு பாலம் அமைக்க குலதெய்வங்களை அனுமதிக்கிறார் என்பதால் குலத்தினர் யார் வேண்டுமானாலும் பூசை செய்யலாம் என்பதாலும் நான் கொடி மரத்தில் அமர்ந்துகொண்டு அம்மா சமாதானத்தை உண்டாக்கு என பிரார்த்தித்தேன்

சில விசயங்களை அறிவால் சாதிக்கவே முடியாது ; மன சம நிலை ; ஞானம் என்பதெல்லாம் உணர்வுக்கு முன்பு எடுபடாது . இன்பம் துன்பம் கடந்த நிலை என்று அழுகை இல்லாமல் பேசினால் திரும்பவும் மண்டக்கணம் உபதேசிக்கிராண்டா என்றுதான் நினைப்பார்கள் ; ஆகவே நான் பேசும்போது அழுகையையும் கொடு என்று வேண்டிக்கொண்டேன்

அவர் கோவிலில் ஒவ்வோர் இடமாக சென்று வந்தவுடன் தொலைவில் உள்ள மஞ்சனத்தி மரத்தை காண்பித்து அங்கு கருப்புசாமி இருப்பதாக கண்டறிந்துள்ளார்கள் ; சென்று வா என்றேன் . அந்த மரத்தின் அருகில் மெதுவாக செல்பவர்தான் என் அண்ணன்







பொதுவாகவே அண்ணன் தம்பிகள் பங்காளி சண்டையிட்டு அழிந்ததுதான் வரலாறு . ஆட்சிக்கு வந்தவுடன் முதலாவது உடன் பிறந்தவர்கள் அனைவரையும் கொன்றோழித்தவர்கல்தான் வல்லரசாக இருந்திருக்கிறார்கள் . ஏனென்றால் அண்ணன் தம்பிகள் ஒருவருக்கு ஒருவர் அடிமையாக இருக்க மனைவிமார்கள் விட மாட்டார்கள் ; ஆனால் அதே பெண்களின் கூட பிறந்தவர்களோ ஒருவருக்கு ஒருவர் அடிமையாக இருப்பதற்கு வெட்கப்படுவதில்லை என்பதையும் நான் நிறைய கண்டிருக்கிறேன் . சகலை என்ற தமிழ்ச்சொல் அவ்வளவு உயிர்ப்புள்ளது .

பெண்களை மீற முடியாமல் சகலைக்கு அடிமையாக இருக்க ஒப்பும் ஆண்கள் உடன்பிறந்தோரிடம் உள்ளார்ந்த பாசத்தை அடக்கி மனைவிமார்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றும் விசத்தால் எதிரியாகி விடுகிறார்கள்

உடன்பிறந்த பெண்களின் பிள்ளைகள் ஒருவருக்கு ஒருவர் எவ்வளவும் தாழ்ந்து போகிறார்கள் ; மற்றவர் உயர்வதைப்பர்த்து போறாமைப்படுவதேயில்லை ; ஆனால் உடன்பிறந்த ஆண்களின் பிள்ளைகள் போட்டி பொறாமை கொள்கிறார்கள் அதில் ஒரு உண்மையும் இருக்கிறது ; பெண்ணே தாங்கும் சக்தி ; அதிதேவர்களில் சமாதான காரணி நாராயணியே .

ஆகவே உள்ளத்தளவாவது சமாதானத்தை உண்டாக்குபடியாக வேண்டிக்கொண்டேன்

அவர் திரும்ப வந்தவுடன் ஏண்ணா ; கல்யாணத்துக்கு கூப்பிட்டிருந்தா வந்திருப்பேண்ணா என்ற போது கடவுளுக்கு நன்றி அழுகை வந்துவிட்டது ; அவராலும் அடக்க முடியவில்லை தேம்பி தேம்பி அழுது விட்டார்

இப்போது நான் ஆன்மீகவாதியாயிற்றே உபதேசித்து விட்டேன்
அண்ணா உனக்கு எவ்வளவு சொத்து போச்சோ அவ்வளவு எனக்கும்தானே போச்சு ; அண்ணனும் செத்துப்போனார் ; இனியும் பிள்ளைகள் கிட்ட வம்பிழுக்க மாட்டேன் என்று நீ சொன்னதாகவும் கேள்விப்பட்டேன் ; இதையேதான் நானும் ஆரம்பத்தில் சொன்னேன் அண்ணன்தம்பிக்குள் விட்டுக்கொடுத்ததை கடவுள் எங்கிட்டாவது கொடுக்கமாட்டாரா ? இப்பயும் உனக்கு என்ன குறை ரெண்டு பிள்ளைகளும் இஞ்சினியரா நல்லாதானே இருக்காங்க

அவரும் சரிரா சரிரா என அழுதுகொண்டே வண்டியை கிழப்பி சென்றுவிட்டார் . நீண்ட நாள் பிரச்சினை சமாதானத்தை உண்டாக்கிய சற்குரு நாராயணியிடம் உள்ளே ஓடி பிரார்த்தனை செய்தேன்

கொஞ்சம் இருட்டவும் தொடங்கி விட்டது . வெளியே சத்தம் கேட்டு பார்த்தால் சிவப்பு சேலை கரிய முகத்துடன் ஒரு தாய் கூட ஒரு பொடியன் . ஏம்மா நாம கோயிலுக்குள்ள போகாமா இங்கிருந்துதானே கும்பிடனும் ; என்ன கொடுமை உள்ள வாங்க உள்ள வாங்க என ஓடி அழைத்தேன் . நான் ராமானுஜரின் சீடனுமல்லவா ; எத்தனை முறை அவர் அனுச்ட்டானத்தில் தியானித்து அக்கினி அபிஷேகம் பெற்றிருக்கிறேன்

அவர்களுக்காக பூசை செய்வித்து தட்டில் பூ பழம் எடுத்து சென்று பிரசாதத்தை எடுத்துக்கொள்ள சொன்னேன் சந்தோசமாக புறப்பட்டு போனார்கள் . எனக்காக ஒரு சந்தேகம் நாலு ஐந்து கி.மீ இந்த மாலை வேலையில் பெண் ஒருவர் இந்தக்கோவிலுக்கு வருவார்களா

தொலைவில் ஒரு திருப்பத்தில் கரிய முகம் கோடிப்பிரகாசத்துடன் பளிச்சென என்னை பார்த்து திருப்பத்தில் மறைந்துவிட்டது ஆகா கிரிஷ்னை கிரிஷ்னை இம்முறையும் ஏமாந்து விட்டேனே

என் நண்பர்கள் சிலர் இப்பிறவியில் அம்பிகை உனக்கு தரிசனமாகி விடுவாள் என்று என்னிடம் எதனாலோ சொல்லி ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி விட்டார்கள் . எனக்கும் அருகே வந்து என்னை ஏமாற்றி சென்று விடுவதுபோலவே பல நிகழ்வுகள் நடந்துகொண்டுதான் உள்ளன . உனக்கே பரம் ; நாராயணி நமஸ்துதே

அபிராமி அந்தாதி

88: பரம் என்று உனை அடைந்தேன்தமியேனும்உன் பத்தருக்குள்
தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது--தரியலர்தம்
புரம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கியபோதில் அயன்
சிரம் ஒன்று செற்றகையான் இடப் பாகம் சிறந்தவளே.


89: 
சிறக்கும் கமலத் திருவேநின்சேவடி சென்னி வைக்கத்
துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும்துரியம் அற்ற
உறக்கம் தர வந்துஉடம்போடு உயிர் உறவு அற்று அறிவு
மறக்கும் பொழுதுஎன் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே.