Total Pageviews

Wednesday, July 15, 2015

திருவெம்பாவை பாடல் 1





மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை

பாடல் 1

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியையாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகான் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிலோர் எம்பாவாய்







சைவ மரபில் மாணிக்கவாசகர் ஒளி சரீரம் அடைந்தவர் என்பதை பலர் அறிவார்கள்

நாயன்மார்கள் அனைவரும் ஒளி சரீரம் பெற்று மரணமில்லா பெருவாழ்வை பெற்றவர்கள் அல்லர்
ஆனால் மாணிக்கவாசகர் மட்டும் ஏன் மரணமில்லா பெருவாழ்வு பெற்றார் என்றால் அவர் வள்ளலாரைப்போலவே சிவனை மட்டும் வழிபட்டவர் என்ற நிலையை கடந்து சிவனுக்கும் மேலான அருப இறைவனை வழிபடும் நிலையை அடைந்தார் என்பதே உண்மையாகும்

திருவண்ணாமாலையின் ரகசியங்களை பலமுறை கிரிவலம் வந்தும் பலர் அறிந்திலர்

திருவண்ணாமலையில் அடி அண்ணாமலை என்ற ஊரின் அருகில் மாணிக்கவாசகர் நின்று அண்ணாமலையின் உச்சியில் ஜோதிவடிவாக வெளிப்படும் ஏக அருப இறைவனை சிவனை குருவாக வைத்து உணர்ந்து வழிபட்டார் . அப்போதே அவர் திருவெம்பாவையை பாடி அருளினார்

முதல்பாடலிலேயே அவர் துவக்கமும் முடிவும் அற்றவரான அருட்பெருஞ்சோதியாகிய இறைவனை உணர்ந்து வழிபட்டார் என்பதே இப்பாடலில் நாம் அறியவேண்டியது . இந்தப்பாடலில்  எங்கும் அவர் சிவனை வழிபடவில்லை ; மாறாக மாதேவர்  வாழ்த்திய வாழ்த்தொலி கேட்டது என்கிறார் . மாதேவர் சிவன் யாரை வாழ்த்தினார் ?

அண்ணாமலையில் கிரிவலம் என்ற சம்பிரதாயம் யாரால் எப்படி துவக்கப்பட்டது என்பதை அறிந்தால் இவ்வினாவிற்கு பதிலை நாம் அறியலாம்

உண்ணாமுலை அம்மன் பல ஆண்டுகள் தவம் இருந்தும் சிவனின் தரிசனம் கிடைக்கவில்லை . அப்போது அவர் கிரிவலம் வந்தபோது நேர் அண்ணாமலை என்கிற இடத்தில் அதாவது அண்ணாமலை கோவிலின் நேர் பின்புறம் அதாவது மேற்கில் அவருக்கு காட்சி கொடுத்தார் என்பதாக அந்த இடத்தில் உள்ள லிங்கம் மற்றும் அம்மன் கோவிலில் எழுதிப்போட்டிருக்கிறார்கள் .

காலப்போக்கில் நடந்த உண்மைகளில் சில மாறுதல்களை மனிதர்கள் தங்களுக்கு புரியவில்லை என்பதற்காக கற்பித்துவிடுவார்கள் .

ஆனால் நாம் அதில் இறைவனின் வழிகாட்டுதல்களை வேண்டினோமேயானால் கிடைக்கும்

உண்ணாமலையம்மன் சிவனின் பாதியாக இருந்து வெளிப்பட்டவர் . சிவனில் பாதியானவர் .பார்வதி என்ற பெயரே பாரியாள் – பாதியாள் என்ற வார்த்தையிலிருந்து வந்ததுவே


அப்படிப்பட்டவர் எதற்காக காணாத ஒருவரை காண தவம் இருக்கவேண்டும் ? அப்படி அவர் தவம் இருந்தது உண்மையே . அது அனுதினமும் கண்ட சிவனை காண்பதற்காக செய்யப்பட்ட தவம் என்பதாக மனிதர்களால் தவறாக வியாக்கியானம் செய்யப்படுகிறது . உண்மையில் அவர் தவம் இருந்தது கண்ட சிவனை காண அல்ல ; தான் காணாத அருட்பெருஞ்சோதியாகிய இறைவனைக்காணவே . சிவனுக்கும் அப்பாற்பட்ட இறைவனை காணவே  .



இந்து வேதத்தின் அனைத்து உபனிஷத்துகளும் இறைவன் ஆதியும் அந்தமும் உருவமும் இல்லாதவர் என்றே குறிப்பிடுகின்றன

வெளிப்பட்ட அனைத்தும் வெளிப்படாத இறைவனின் பகுதிகளே

அருவ இறைவன் நான்கு அதிதேவர்களாக வெளிப்பட்டுள்ளார் .

அவர்கள் முறையே நாராயணன் ; சிவன் ; சேஷன் மற்றும் நாராயணி என்ற அதிதேவர்களே .


இந்த நால்வருக்கும் கீழேயே சகலமும் அணியணியாக உள்ளன .




மூலமந்திரங்களை கவணியுங்கள் :

ஓம் நமோ நாராயணாய – நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம் .

ஓம் நமோ சிவாய – சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம் .

ஓம் நமோ ஆதிசேஷாய – ஆதிசேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம் .





ஓம் நமோ நாராயணியாய – நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம் .

ஆப்ரகாமிய வேதங்கள் இந்தய நால்வரை முறையே காப்ரியேல் ; மைக்கேல் ; யுரேல் & ராபேல் என்று அழைக்கின்றன

இந்த நால்வரும் எப்படி அறியாத இறைவனின் நேரடி வெளிப்பாடோ அவ்வளவு இந்த நால்வரில் ஒவ்வொருவரும் தனியே இறைவனின் முழுமையை குறிக்க போதுமானவர்களல்ல என்பதும் உண்மை

ஆனால் ஆரம்ப காலங்களில் இந்த ஒவ்வொருவரையும் தனித்தனியே வைத்து உருவான குருகுலங்கள் ; மார்க்கங்கள் தங்கள் அதிதேவர் மட்டுமே இறைவன் என்பதுபோல உயர்த்தி பேசி மற்றவரை மட்டம் தட்டவும் தொடங்கி விட்டார்கள்

ஆனால் சமாதன காலத்தின் சமரச வேதம் இந்த குறைகளை நிவர்த்தி செய்து இந்த நால்வரின் மூலமாகவும் மட்டுமே இவர்களுக்கும் அப்பாற்பட்ட இறைவனின் முழுமையை உணரமுடியும் என்று வெளிப்படுத்துகிறது

சற்குருநாதர்களான இந்த நால்வரின் நாமத்தால் மட்டுமே அருட்பெருஞ்சோதியாகிய அருவ இறைவனை அதாவது அல்லாவை உணரமுடியும்

அந்த இறைவனையே உண்ணாமுலையம்மை காண்பதற்கு கோவிலில் தவம் செய்தும் தரிசனம் கிடைக்கவில்லை . அப்போது அவர் கிரிவலம் வந்தபோது நேர் அண்ணாமலை என்ற இடத்தில் மலை உச்சியின் மீது அருட்பெருஞ்சோதியாக இறைவனை தரிசித்தார்

இது மனிதர்கள் உணர்வதற்கு அடையாளமாக கார்த்திகை தீபமாக காட்டப்படுகிறது

இறைவன் அருட்பெருஞ்சோதியானவர் ; அவரை சிவனை சற்குருவாக வைத்து வழிபட்டு உணரவேண்டும் .

சிவனால் ஆட்கொள்ளப்பட்ட மானிக்கவாசகரும் சிவனின் வழிநடத்துதலால் இந்த மெய்ஞானம் உணர்ந்து அண்ணாமலை வந்து கிரிவலம் வந்தபோது திருவெம்பாவை பாடியருளினார்



அதில் அவர் அருட்பெருஞ்சோதியையே வழிபட்டார் . மாதேவரான சிவனாரும் அவரை வாழ்த்தியதை உணரும் நல்லடியார்கள் மெய்ஞானத்தால் சுயத்தை மறந்து முழுமை அடைகிறார்கள் . அதைப்போல உலக மாந்தர்களே நீங்களும் உணருங்கள் என்பதே இப்பாடலின் பொருள் .

திருவெம்பாவை பாடல்கள் அனைத்தும் ஏல் ஓர் எம்பாவாய் என்றே முடியும்

ஏல் என்பது யூத பாஸையில் கடவுளை குறிப்பது அதிதேவர் சிவன் 
மூலமாக அண்ணாமலை உச்சியில் காட்சிப்படுத்தப்படும் அருட்பெருஞ்சோதி என்ற

அந்த ஓர் இறைவனை வழிபட வேண்டும் என்பதே ஏல் ஓர்

எம்பாவாய் என குறிக்கப்படுகிறது

நாராயணன் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் சேஷனனின் நாமத்தினாலும் நாராயணியின் நாமத்தினாலும் கடவுள் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் தமது அருளால் நிரப்ப வேண்டுகிறேன்

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி