Total Pageviews

Monday, May 11, 2015

அபிராமி அந்தாதி பாகம் II







51: அரணம் பொருள் என்றுஅருள் ஒன்று இலாத அசுரர் தங்கள்
முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும்முகுந்தனுமே,
சரணம் சரணம் என நின்ற நாயகி தன் அடியார்,
மரணம் பிறவி இரண்டும் எய்தார்இந்த வையகத்தே.


52: வையம்துரகம்மதகரிமா மகுடம்சிவிகை
பெய்யும் கனகம்பெருவிலை ஆரம்,--பிறை முடித்த
ஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு
செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே.


53: சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய செய்ய பட்டும்
பென்னம் பெரிய முலையும்முத்தாரமும்பிச்சி மொய்த்த
கன்னங்கரிய குழலும்கண் மூன்றும்கருத்தில் வைத்துத்
தன்னந்தனி இருப்பார்க்குஇது போலும் தவம் இல்லையே.


54: இல்லாமை சொல்லிஒருவர் தம்பால் சென்றுஇழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல்நித்தம் நீடு தவம்
கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.


55: மின் ஆயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றது
அன்னாள்அகம் மகிழ் ஆனந்தவல்லிஅருமறைக்கு
முன்னாய்நடு எங்கும் ஆய்முடிவு ஆய முதல்விதன்னை
உன்னாது ஒழியினும்உன்னினும்வேண்டுவது ஒன்று இல்லையே.


56: ஒன்றாய் அரும்பிபலவாய் விரிந்துஇவ் உலகு எங்குமாய்
நின்றாள்அனைத்தையும் நீங்கி நிற்பாள்--என்றன்நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவாஇப் பொருள் அறிவார்--
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும்என் ஐயனுமே.


57: ஐயன் அளந்தபடி இரு நாழி கொண்டுஅண்டம் எல்லாம்
உய்ய அறம் செயும் உன்னையும் போற்றிஒருவர் தம்பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்றுபொய்யும்
மெய்யும் இயம்பவைத்தாய்இதுவோஉன்தன் மெய்யருளே?


58: அருணாம்புயத்தும்என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம்புயமுலைத் தையல் நல்லாள்தகை சேர் நயனக்
கருணாம்புயமும்வதனாம்புயமும்கராம்புயமும்,
சரணாம்புயமும்அல்லால் கண்டிலேன்ஒரு தஞ்சமுமே.


59: தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லதுஎன்று உன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன்ஒற்றை நீள்சிலையும்
அஞ்சு அம்பும் இக்கு அலராகி நின்றாய்அறியார் எனினும்
பஞ்சு அஞ்சு மெல் அடியார்அடியார் பெற்ற பாலரையே.


60: பாலினும் சொல் இனியாய்பனி மா மலர்ப் பாதம் வைக்க--
மாலினும்தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார் சடையின்
மேலினும்கீழ்நின்று வேதங்கள் பாடும் மெய்ப் பீடம் ஒரு
நாலினும்சால நன்றோ--அடியேன் முடை நாய்த் தலையே?


61: நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து,
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய்நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய்என்ன பேறு பெற்றேன்.--
தாயேமலைமகளேசெங்கண் மால் திருத் தங்கைச்சியே.


62: தங்கச் சிலை கொண்டுதானவர் முப்புரம் சாய்த்துமத
வெங் கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகிகோகனகச்
செங் கைக் கரும்பும்மலரும்எப்போதும் என் சிந்தையதே.


63: தேறும்படி சில ஏதுவும் காட்டிமுன் செல்கதிக்குக்
கூறும் பொருள்குன்றில் கொட்டும் தறி குறிக்கும்--சமயம்
ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்,
வேறும் சமயம் உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே.


64: வீணே பலி கவர் தெய்வங்கள்பால் சென்றுமிக்க அன்பு
பூணேன்உனக்கு அன்பு பூண்டுகொண்டேன்நின்புகழ்ச்சி அன்றிப்
பேணேன்ஒரு பொழுதும்திருமேனி ப்ரகாசம் அன்றிக்
காணேன்இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே.


65: ககனமும் வானும் புவனமும் காணவிற் காமன் அங்கம்
தகனம் முன் செய்த தவம்பெருமாற்குதடக்கையும் செம்
முகனும்முந்நான்கு இருமூன்று எனத் தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயது அன்றோ?--வல்லிநீ செய்த வல்லபமே.


66: வல்லபம் ஒன்று அறியேன்சிறியேன்நின் மலரடிச் செய்
பல்லவம் அல்லது பற்று ஒன்று இலேன்பசும் பொற் பொருப்பு--
வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய்வினையேன் தொடுத்த
சொல் அவமாயினும்நின் திரு நாமங்கள் தோத்திரமே.


67: தோத்திரம் செய்துதொழுதுமின் போலும் நின் தோற்றம் ஒரு
மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர்--வண்மைகுலம்,
கோத்திரம்கல்விகுணம்குன்றிநாளும் குடில்கள் தொறும்
பாத்திரம் கொண்டு பலிக்கு உழலாநிற்பர்--பார் எங்குமே.


68: பாரும்புனலும்கனலும்வெங் காலும்படர் விசும்பும்,
ஊரும் முருகு சுவை ஒளி ஊறு ஒலி ஒன்றுபடச்
சேரும் தலைவிசிவகாம சுந்தரிசீறடிக்கே
சாரும் தவம்உடையார் படையாத தனம் இல்லையே.


69: தனம் தரும்கல்வி தரும்ஒருநாளும் தளர்வு அறியா
மனம் தரும்தெய்வ வடிவும் தரும்நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும்நல்லன எல்லாம் தரும்அன்பர் என்பவர்க்கே--
கனம் தரும் பூங் குழலாள்அபிராமிகடைக்கண்களே,


70: கண்களிக்கும்படி கண்டுகொண்டேன்கடம்பாடவியில் பண்
களிக்கும் குரல் வீணையும்கையும் பயோதரமும்,
மண் களிக்கும் பச்சை வண்ணமும் ஆகிமதங்கர்க்குலப்
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே.


71: அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லிஅரு மறைகள்
பழகிச் சிவந்த பதாம்புயத்தாள்பனி மா மதியின்
குழவித் திருமுடிக் கோமளயாமளைக் கொம்பு இருக்க--
இழவுற்று நின்ற நெஞ்சே.-இரங்கேல்உனக்கு என் குறையே?

72: எங்குறை தீரநின்று ஏற்றுகின்றேன்இனி யான் பிறக்கில்,
நின் குறையே அன்றி யார் குறை காண்?-இரு நீள் விசும்பின்
மின் குறை காட்டி மெலிகின்ற நேர் இடை மெல்லியலாய்.-
தன் குறை தீரஎம்கோன் சடை மேல் வைத்த தாமரையே.

73: தாமம் கடம்புபடை பஞ்ச பாணம்தனுக் கரும்பு,
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுதுஎமக்கு என்று வைத்த
சேமம் திருவடிசெங்கைகள் நான்குஒளி செம்மைஅம்மை
நாமம் திரிபுரைஒன்றோடு இரண்டு நயனங்களே.


74: நயனங்கள் மூன்றுடை நாதனும்வேதமும்நாரணனும்,
அயனும் பரவும் அபிராம வல்லி அடி இணையைப்
பயன் என்று கொண்டவர்பாவையர் ஆடவும் பாடவும்பொன்
சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே.


75: தங்குவர்கற்பக தாருவின் நீழலில்தாயர் இன்றி
மங்குவர்மண்ணில் வழுவாய் பிறவியை,-மால் வரையும்,
பொங்கு உவர் ஆழியும்ஈரேழ் புவனமும்பூத்த உந்திக்
கொங்கு இவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே.


76: குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம்நின் குறிப்பு அறிந்து
மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழிவண்டு கிண்டி
வெறித்தேன் அவிழ் கொன்றை வேணிப் பிரான் ஒரு கூற்றைமெய்யில்
பறித்தேகுடிபுகுதும் பஞ்ச பாண பயிரவியே.


77: பயிரவிபஞ்சமிபாசாங்குசைபஞ்ச பாணிவஞ்சர்
உயிர் அவி உண்ணும் உயர் சண்டிகாளிஒளிரும் கலா
வயிரவிமண்டலிமாலினிசூலிவராகி--என்றே
செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே.


78: செப்பும் கனக கலசமும் போலும் திருமுலைமேல்
அப்பும் களப அபிராம வல்லிஅணி தரளக்
கொப்பும்வயிரக் குழையும்விழியின் கொழுங்கடையும்,
துப்பும்நிலவும் எழுதிவைத்தேன்என் துணை விழிக்கே.


79: விழிக்கே அருள் உண்டுஅபிராம வல்லிக்குவேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்குஅவ்வழி கிடக்க,
பழிக்கே சுழன்றுவெம் பாவங்களே செய்துபாழ் நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடுஎன்ன கூட்டு இனியே?


80: கூட்டியவா என்னைத் தன் அடியாரில்கொடிய வினை
ஓட்டியவாஎன்கண் ஓடியவாதன்னை உள்ளவண்ணம்
காட்டியவாகண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா,
ஆட்டியவா நடம்--ஆடகத் தாமரை ஆரணங்கே.


81: அணங்கே.-அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால்,
வணங்கேன் ஒருவரைவாழ்த்துகிலேன் நெஞ்சில்வஞ்சகரோடு
இணங்கேன்எனது உனது என்றிருப்பார் சிலர் யாவரொடும்
பிணங்கேன்அறிவு ஒன்று இலேன்என்கண் நீ வைத்தபேர் அளியே.


82: அளி ஆர் கமலத்தில் ஆரணங்கேஅகிலாண்டமும் நின்
ஒளியாக நின்ற ஒளிர் திருமேனியை உள்ளுந்தொறும்,
களி ஆகிஅந்தக்கரணங்கள் விம்மிகரைபுரண்டு
வெளியாய்விடின்எங்ஙனே மறப்பேன்நின் விரகினையே?


83: விரவும் புது மலர் இட்டுநின் பாத விரைக்கமலம்
இரவும் பகலும் இறைஞ்ச வல்லார்இமையோர் எவரும்
பரவும் பதமும்அயிராவதமும்பகீரதியும்,
உரவும் குலிகமும்கற்பகக் காவும் உடையவரே.


84: உடையாளைஒல்கு செம்பட்டுடையாளைஒளிர்மதிச் செஞ்
சடையாளைவஞ்சகர் நெஞ்சு அடையாளைதயங்கு நுண்ணூல்
இடையாளைஎங்கள் பெம்மான் இடையாளைஇங்கு என்னை இனிப்
படையாளைஉங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே.

85: பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும்பனிச் சிறை வண்டு
ஆர்க்கும் புதுமலர் ஐந்தும்கரும்பும்என் அல்லல் எல்லாம்
தீர்க்கும் திரிபுரையாள் திரு மேனியும்சிற்றிடையும்,
வார்க் குங்கும முலையும்முலைமேல் முத்து மாலையுமே.


86: மால் அயன் தேடமறை தேடவானவர் தேட நின்ற
காலையும்சூடகக் கையையும்கொண்டு--கதித்த கப்பு
வேலை வெங் காலன் என்மேல் விடும்போதுவெளி நில் கண்டாய்
பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே.


87: மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தம்என்தன்
விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால்,--விழியால் மதனை
அழிக்கும் தலைவர்அழியா விரதத்தை அண்டம் எல்லாம்
பழிக்கும்படிஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையே.


88: பரம் என்று உனை அடைந்தேன்தமியேனும்உன் பத்தருக்குள்
தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது--தரியலர்தம்
புரம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கியபோதில் அயன்
சிரம் ஒன்று செற்றகையான் இடப் பாகம் சிறந்தவளே.


89: சிறக்கும் கமலத் திருவேநின்சேவடி சென்னி வைக்கத்
துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும்துரியம் அற்ற
உறக்கம் தர வந்துஉடம்போடு உயிர் உறவு அற்று அறிவு
மறக்கும் பொழுதுஎன் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே.


90: வருந்தாவகைஎன் மனத்தாமரையினில் வந்து புகுந்து,
இருந்தாள்பழைய இருப்பிடமாகஇனி எனக்குப்
பொருந்தாது ஒரு பொருள் இல்லை--விண் மேவும் புலவருக்கு
விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே.


91: மெல்லிய நுண் இடை மின் அனையாளை விரிசடையோன்
புல்லிய மென் முலைப் பொன் அனையாளைபுகழ்ந்து மறை
சொல்லியவண்ணம் தொழும் அடியாரைத் தொழுமவர்க்கு,
பல்லியம் ஆர்த்து எழவெண் பகடு ஊறும் பதம் தருமே.


92: பதத்தே உருகி, நின் பாதத்திலே மனம் பற்றி, உன்தன்
இதத்தே ஒழுகஅடிமை கொண்டாய்இனியான் ஒருவர்
மதத்தே மதி மயங்கேன்அவர் போன வழியும் செல்லேன்--
முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும்முகிழ் நகையே.


93: நகையே இது, இந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு,
முகையே முகிழ் முலைமானேமுது கண் முடிவுயில்அந்த
வகையே பிறவியும்வம்பேமலைமகள் என்பதும் நாம்,
மிகையே இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே.


94: விரும்பித் தொழும் அடியார் விழிநீர் மல்கி, மெய் புளகம்
அரும்பித் ததும்பிய ஆனந்தம் ஆகிஅறிவு இழந்து
கரும்பின் களித்துமொழி தடுமாறிமுன் சொன்ன எல்லாம்
தரும் பித்தர் ஆவர் என்றால் அபிராமி சமயம் நன்றே.


95: நன்றே வருகினும், தீதே விளைகினும், நான் அறிவது
ஒன்றேயும் இல்லைஉனக்கே பரம்எனக்கு உள்ளம் எல்லாம்
அன்றே உனது என்று அளித்து விட்டேன்:- அழியாத குணக்
குன்றேஅருட்கடலேஇமவான் பெற்ற கோமளமே.


96: கோமளவல்லியை, அல்லியந் தாமரைக் கோயில் வைகும்
யாமள வல்லியைஏதம் இலாளைஎழுதரிய
சாமள மேனிச் சகலகலா மயில்தன்னைதம்மால்
ஆமளவும் தொழுவார்எழு பாருக்கும் ஆதிபரே.


97: ஆதித்தன், அம்புலி, அங்கி குபேரன், அமரர்தம் கோன்,
போதிற் பிரமன் புராரிமுராரி பொதியமுனி,
காதிப் பொருபடைக் கந்தன்கணபதிகாமன் முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர்தையலையே.


98: தைவந்து நின் அடித் தாமரை சூடிய சங்கரற்கு
கைவந்த தீயும்தலை வந்த ஆறும்கரலந்தது எங்கே?--
மெய் வந்த நெஞ்சின் அல்லால் ஒருகாலும் விரகர் தங்கள்
பொய்வந்த நெஞ்சில்புகல் அறியா மடப் பூங் குயிலே.


99: குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை, கோல வியன்
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடைவந்து உதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில்கமலத்தின்மீது அன்னமாம்,
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே


100: குழையைத் தழுவிய கொன்றையந் தார் கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநெடுந் தோளும்கருப்பு வில்லும்
விழையப் பொரு திறல் வேரியம் பாணமும் வெண் நகையும்
உழையைப் பொருகண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே!


நூற்பயன்


ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம்
பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக்
காத்தாளை, ஐங்கணைப் பாசங்குசமும் கருப்புவில்லும்
சேர்த்தாளை, முக்கண்ணியைத், தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே.