Total Pageviews

Sunday, March 3, 2013

இளமை !!


-- யுகபுருஷன் இறைதூதர் ராமரின் உபதேசங்கள் --

அறியாமையே மிகுந்திருக்கும் இளமையிலே மனம் சஞ்சலப்பட்டு அலைகிறது ! அலைபாயும் மனதின் பலவகையான விளையாட்டுப்போக்குகளுக்கு இளைஞர்கள் பலியாகிறார்கள் ! ஆகவே ஒரு மாயைக்கு பிறகு இன்னொரு மாயை ; ஒரு சிக்கலுக்கு பின்பு இன்னொரு சிக்கல் ; ஒரு துன்பத்திற்கு பின்பு இன்னொரு துன்பம் ; ஒரு தீய பழக்கத்துக்கு பின்பு இன்னொரு தீய பழக்கம் என்று எதிலாவது மாட்டிக்கொண்டு தவியோதவியென்று தவிக்கிறார்கள் ; அல்லாடுகிறார்கள் ! தங்களையும் தங்கள் நேரத்தையும் சிந்தனையையும் வீணாக்கி பிறரையும் பெற்றோரையும் துன்பத்தில் ஆழ்த்துகிறார்கள் !!

சுயகட்டுப்பாடு இல்லாத இளைஞர்களை இதயத்தில் இருக்கும் இச்சைப்பேய் -- காமப்பேய் -- மோகப்பேய் -- போதைப்பேய் தன் வசப்படுத்திக்கொள்ளுகிறது !!

இளமை என்ற பயங்கரமான காடு பலவிதமான விசித்திர ஆபத்துகள் நிறைந்தது ! அனுபவமிண்மை ; எதையும் அனுபவித்துப்பார்க்க துடிக்கும் ஆவல் ; விவேகமில்லா வீரம் ; வெளிகாட்டத்துடிக்கும் மாயப்பெருமை ; காமத்தை திரித்து புகழாக சித்தரிக்கப்பட்ட காதல் ; புத்திமயக்கம் ; குருட்டுத்துணிச்சல் என பல கண்ணிகள் அற்ப விசயங்களுக்காகவும் இளைஞனை காலைக்கட்டி விடுகின்றன !!

சுற்றிச்சுழன்று கொந்தளிக்கும் காட்டாற்று வெள்ளத்தைக்கூட கடந்து விடலாம் ; இளமைப்பருவத்தின் ஆசைகளைத்தவிர்ப்பது சுலபமானதல்ல ! விவேகம் இல்லாத விவகாரங்களில் துணிச்சலாக இறங்குகிறவனின் கதி அதோகதியாக முடிகிறது !!
சங்கடங்கள் நிறைந்த இளமைப்பருவத்தை தாண்டி பத்திரமாக மறுகரையை அடைந்தவர்களே வாழும் வழி தெரிந்தவர்கள் ! அவர்களே மனிதர்கள் என அழைப்பதற்கு தகுதி உள்ள வாழ்வு வாழ்வார்கள் !!

பெற்றோர்க்கும் மூத்தோர்க்கும் பணிவை அணிகலனாகக்கொண்டு , அன்பு முதலிய நல்லியல்புகளால் பிரகாசிக்கும் இளமையும் ; தன் பெற்றோர்கள் மூத்தோர்களால் வரும் வாழ்வை கடவுள் தனக்கு கொடுக்கும் வாழ்வாக முழுமனதுடன் ஏற்று அதனை சிறப்புற வாழ பக்குவப்பட்ட மனமுடைய இளமையும் போற்றுதலுக்குரிய இளமையாகும் ! அத்தகைய குணநலங்களுடன் கூடிய இளமை வாழ்வாங்கு வாழத்தகுதியும் கடவுளுடன் ஒப்புறவாவதிலும் முடியும் !!

உறைபனி பெய்தால் தாமரை அழிகிறது ! ஆற்றுவெள்ளத்தால் ஆற்றங்கரை மரங்கள் வீழ்கிறது ! அதுபோல முதுமையால் இளமை அழிகிறது !! மூப்பு வந்ததும் உடல் எல்லா அழகும் வணப்பும் குன்றி அவலட்சனமடைகிறது !! முதுமையால் ஏற்படும் தளர்ச்சியால் அங்கங்கள் ஆற்றல் குறைந்து சோர்ந்து போய் விடுகிறது !!

இளமை அமைதியில்லாதது ! அது யாரிடமும் நிலைத்து தங்குவதில்லை ! அதன் வணப்பும் கர்வமும் சின்னாளிலேயே கடந்துபோய் விடும் ! அதை பக்தியிலும் சத்சங்கத்திலும் கடறுகிற இளைஞன் பாக்கியம் பெற்றோன் !! 

ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே     
ஓம் நமோ நாராயணா !!அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி