Total Pageviews

Sunday, January 8, 2012

வள்ளலார் சீடர்களுடன் சம்பாசனை !!!

http://www.facebook.com/photo.php?fbid=295507903832907&set=a.156372927746406.40900.100001211005910&type=1


அய்யா!உண்மையை நெருங்குகிறீர்கள் !சில நுட்பமான தவறுகளில் உள்ளீர்கள்! சுட்டி காட்டுகிறேன்!!
1 )ஆன்மாக்கள் எல்லாம் இறைவன் படைப்பு உயிரும் உடம்பும் மாயையின் படைப்பு ////
உயிர் என்பது கடவுளின் ஆவியில் ஒரு துளி !அகண்ட ஆவியே எல்லாவற்றிக்கும் மூலமாகும் !அதை அவர் அருளுகிறார் !எடுத்து கொள்ளுகிறார் !அது இருக்கும் வரை ஒரு ஆத்துமா ஜீவாத்துமா அது எடுக்க பட்டால் மரித்த ஆத்துமா !உடலும் ஆதியில் கடவுளால் உருவாக்க பட்டதுதான் !ஆனால் புற உலகோடு தொடர்பு கொண்டு ஆத்துமாவை மயக்குவதாக உள்ளது !அசுரர்கள் இந்த உடம்பின் இச்சைகளை துண்டி ஆத்துமாவின் மீது ஆதிக்கம் செய்கிறார்கள் !உயிர் மீது ஆதிக்கம் செய்ய இயலாது ஏனென்றால் கடவுளின் ஆவி அது !ஆத்துமா உடலை தான் என எண்ணி உயிரை மதிக்காது விடுகிறது !அதனால் அசுரர்களின் ஆளுகைக்கு தானாக ஒப்பு கொடுக்கிறது !அப்படியில்லாமல் தான் உடலல்ல ஆத்துமா என்பதை உணர்வது தான் ஆன்மீகம்!அந்த ஆன்மா உயிரின் மீது சார்ந்து முற்ருயிராகிய கடவுளோடு பிரார்த்தனை மூலமாக தொடர்பு கொண்டால் உடலையும் அதன் இச்சைகள் மூலமாக தன்னை ஆள முயற்சி செய்கிற அசுரர்களையும் வெல்ல முடியும் !இதுவே குருசேத்திர யுத்தம் !எல்லா மதங்களையும் தோற்றுவித்த இறைதூதர்கள் ஒரே கடவுளை தான் சொன்னார்கள் !அவர்கள் சென்று போனதும் சீடர்கள் இறைதூதர்களை கடவுளுக்கு இணை வைத்தனர் !--நீங்கள் வள்ளலாரை மட்டும் தூக்கி வைப்பதை போல !
2 )மேலே கண்டபடி வாழ்பவர்களுக்கு ஆன்மாவில் உள்ள அருள் அமுதம் சுரக்கும் .அந்த அருளை உண்பவர்களுக்கு எக்காலத்திலும் அழியாத,{ ஊன}உடம்பு ஒளி உடம்பாக மாறும்.அதற்கு ஒளி தேகம் என்று பெயராகும் .அந்த தேகம் படைத்தவர்களை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது ,நெருங்கவும் முடியாது .பார்க்கவும் முடியாது.அவர்கள் எங்கு வேண்டு மானாலும், நினைத்த மாத்திரத்தில் .செல்வார்கள் அருட்பெரும்ஜோதி ஆண்டவருக்கு உள்ள அனைத்து சத்திகளும் அவருக்கு உண்டு .இதுவே அருளின் தன்மையாகும் இதை அனுபவித்து வாழ்ந்து கொண்டு இருப்பவர் தான் வள்ளலார் என்பவராகும்.///////////
மனிதன் சுயமாக கடவுளின் சக்தியை அடைந்து விடலாம் என்பதும் அடிப்படையில் அசுர மாயையாகும் !நாங்களும் கடவுளாகி விட்டோம் என்பது அசுரர்களின் குரல் !தேவதூதர்கள் கடவுளின் முதல் படைப்பு !இவர்கள் ஆவி ரூபத்தினர் --ஒளியுடம்பு தேகத்தினர் !இவர்களில் யார் கடவுளின் ஏக அதிகாரத்தை ஏற்றுகொள்ளாமல் கலகம் செய்து பிரிந்தார்களோ அவர்களே அசுரர்கள் --மனிதனை விட மேலான சக்திகள் ஆனாலும் கடவுளை எதிர்ப்பவர்கள் !இவர்களின் வெற்றிடத்தை நிரப்பவே பூமியில் மனித படைப்பு !மனிதர்களில் தேறுபவர்கள் ஒளியுடம்பு பெற்று தேவதூதராக ஆகலாமே தவிர கடவுளை போல ஆக முடியாது !தேவதூதர்கள் எவ்வளவு சக்தி இருந்தாலும் கடவுள் சொல்லாமல் அதை பயன்படுத்த மாட்டார்கள் அழைத்தாலும் வர மாட்டார்கள் !அதனால் தான் ஒளியுடம்பு பெற்ற வள்ளலார் வருவதில்லை !!! ஆனால் அசுரர்கள் தம்மை சிலருக்கு வெளிப்படுத்தி அழைத்தவுடன் வந்து பல காரியங்களை செய்து கொடுக்கும் போது தம்மை விட மேலான சக்திகளான அசுரர்களை கடவுள் என நம்புவது மனிதர்களின் வாடிக்கை !அவைகளையும் மனிதர்கள் வணங்க தொடங்குகின்றனர்!அசுர சக்திகள் தமக்கென பூமியில் ஒரு கூட்டத்தை சேர்த்துகாட்டி கடவுளுக்கு சவால் விடுகின்றன! இவை உலக வாழ்க்கையில் பல நன்மைகளை செய்து கொடுத்தாலும் ஏக இறைவனின் ராஜ்ஜியத்தை தேடுவது பற்றி முக்கிய படுத்தாது !எல்லா இறைதூதர்களின் சீடர்களிடம் நுட்பமாக கலந்து இறைதூதர்களையும் கடவுளுக்கு இணை ஆக்கியது இவர்களே !இறைதூதர்கள் அருளிய வேதங்களில் நுட்பமாக தங்கள் வார்த்தையை கலந்து அவற்றின் அர்த்தத்தை திரித்து உபதேசம் செய்ய தொடங்கும் !ஏக இறைவனை தேடாது ! அவரது அதிகாரத்தை ஏற்று அவருக்கு கீழ்படிவதான சரணாகதி தத்துவத்தை முக்கியபடுத்தாது! மற்ற விசயங்களில் கவனத்தை திருப்பி விடும் !இப்படி தான் எல்லா மதங்களையும் அதன் ஜீவனை விட்டு திருப்பி சடங்காச்சாரங்களாக; சண்டை போடுகிரவையாக மாற்றி விட்டனர் ! இந்த மாயை வள்ளலாரின் சீடர்களையும் பற்றி விட்டது !அருட்பெரும் ஜோதி ஆகிய கடவுளை தேடுவது அவருக்கு கீழ்படிவது என்பதை கொஞ்சம் ஓரங்கட்டி ஒளியுடம்பு பெறவது --சாகாகல்வி பெறுவது என அசுர மாயை நுட்பமாக திசை திருப்பும் வேலையை செய்து கொண்டுள்ளது !கடவுள் அருளினாலொளிய ஒளியுடம்பு பெறவே முடியாது !ஒளியுடம்பு பெற்றாலும் கடவுளுக்கு இணை ஆக முடியாது!கடவுள் நினத்தால் ஒளியுடம்பு உள்ளவர்களையும் அழித்து விடமுடியும்! அவரின் சித்தம் செய்கிற தேவதூதன் என்கிற அடியவன் என்கிற நிலை மட்டுமே அடைய முடியும் !அதற்க்கு அருட்பெரும் சோதியாகிய ஏக இறைவனின் மீது வழிபாட்டை பெருக்குவதும் பக்தியோக பெரு நிலையாகிய சரணாகதியை ஊக்கிவிப்பதும் சரியானது !
ஒளியுடம்பு பெறுவது மட்டும் இலக்கு  அல்ல !ஒளியுடம்பு பெற்று எந்த கூட்டத்தில்  கலக்க போகிறோம் என்பது அதை விட முக்கியம் !!!நாம் கடவுளுக்கு அடியவரான தேவதூதராக மாறுவதா ? அல்லது கடவுளை அவமதிக்கிற அசுரர்களாக மாறுவதா ? இந்த எச்சரிக்கையுடன் கடவுளை தேடுவது நல்லது !!!