Total Pageviews

Saturday, January 7, 2012

இல்லறம் என்ற நல்லறம் !!!

               அன்பினால் குடும்பம் ஒன்றாக கட்டப்படவேண்டும் இக்கருத்தை மனித ஞானத்தில் ஈருயிரும் ஓருயிராய் என்றார்கள்!                                                                  ஆனால் தேவஞானம் வெளிப்படுத்துவது: உயிர் மீது மனிதனுக்கு ஆளுமையில்லை அது கடவுள் மனிதனுக்கு அருளுவது மீண்டும் கடவுளால் எடுத்து கொள்ளபடுவது!ஒரு மனிதன் மரித்த பிறகு இது இவரிவர் உயிர் என்று தனியாக பாதுகாக்க படுவதில்லை!ஆத்துமாவே மனிதன் அது ஆணாகவோ பெண்ணாகவோ இல்லை இந்த பூமிக்குரிய உடலில் இருப்பதால் தன்னை ஆணாகவோ பெண்ணாகவோ கருதிக்கொள்ளுகிறது மறுமையில் குடும்பமோ குட்டிகளோ பந்தங்களோ இல்லை கடவுள் ஒருவரே நமக்கு உறவு எஜமான் எல்லாம்!
                இப்பூமியில் ஒரே சரீரத்திலிருந்தே --அதாவது ஆணிலிருந்தே பெண் சரீரம் கடவுள் உண்டாக்கினார்! ஒரே தன்மை இல்லாத ஒரு ஆணோ பெண்ணோ திருமண உறவுக்குள் பிணைக்கபட முடியாது! கடவுள் இணைக்காத ஒன்று ஜோடி சேரவே முடியாது!திருமண மேடையில் ஜோடிகள் மாறிபோவதை நாம் காண்பதில்லையா? கடவுளாக இணைத்து வைக்கிற ஒன்றை உள்ளது உள்ளபடியாக ஏற்றுக்கொள்ளவும் வாழ்ந்தேயாகவேண்டும் என்கிற மனநிலையில் இருவரும் அனுசரித்து போவதில் போட்டி போடுவதால் ஏற்படுகிற காதலே அறிவுப்பூர்வமானது நடைமுறை பூர்வமானதும் கூட!
இயேசு சொன்னார் இவர்கள் இருவரும் ஈருடல் அல்ல ஓர் உடல்! கடவுள் இணைத்ததை மனிதன் பிறிக்காதிருக்கட்டும்!!
                வேறொங்கோ பிறந்திருந்தாலும் நம் உடலின் தன்மை அதாவது நமது உடல் உள்ள ஒருவர்தான் நம்மோடு இணைகிறார்கள்! நுனுக்கமாக ஆணின் நிறை பெண்ணின் குறையாகவும்;குறை நிறையாகவும் மாறி இருக்கும்! இதில் சரியான புரிதல் வந்தால் எதில் யார் நிறையோ அவர்களை அந்த விசயத்தை கவணிக்கிறவராக வேலை பகிர்வு செய்து கொள்வது நல்லது இம்மாதியான புரிதல் ஆணுக்கு அதிகமாக இருந்துவிட்டால் குடும்பம் சிறப்பாக அன்பால் அமைதியால் கட்டப்பட்டதாக இருக்கும் கடவுளைத்தேடுகிற சரணடைந்த நிறைபக்தர்களே முன்னுதாரணமாய் விளங்கமுடியும்! உன்னை நேசிப்பது போல உன் அயலானையும் நேசிப்பாயாக என்பதில் முதலாவது மனைவியை நேசிப்பதும் அடங்கும் கடவுள் மீது உள்ளார்ந்த அன்பும் அது போல அவராலும் நாம் நேசிக்கப்படுகிறோம் வழிநடத்தப்படுகிறோம் என்பதை அனுபவப்பட்ட ஒரு நபருக்கே இத்தகைய தெய்வீக அன்பு ஊற்றெடுத்து குடும்பத்திலும் சமுதாயத்திலும் பரவும்! கடவுளின் அடியவர்களை குறித்த நற்சான்று சுற்றிலும் இருக்கும்!!!
                    எனவே ஈருடலும் ஓருடலாய் கடவுளால் இணைக்கப்பட்ட வேறுவேறு ஆத்துமாக்களே கணவன் மனைவி என்பதை உணர்ந்தவர்களாய் பூமிக்குறிய வாழ்வில்கடமையை செய்கிறவர்களாய் இல்லறத்தில் துறவறம் பேணுகிற வாழ்வே சிறந்தது!!!ஒரு நிறைபக்தன் இரூமைகளை கடந்தவனாக இருப்பான் என்பதை கீதை,பைபிள், குரான் சுட்டியுள்ளது!இல்லறத்தில் தன்னொடு பந்தமில்லாத சுதந்திர ஆத்துமாக்கள் ; தற்காலிகமாக கணவன்,மனைவி,குழந்தைகள் என்ற பந்தத்தில் உள்ளது என்பதை உணர்ந்தவனாய் கடமைகளை செய்கிற நேரத்திலும் அவனின் மனம் தன் கடமைகள் சிறப்புற நிறைவேறவும் பந்தமுள்ள ஒன்றான கடவுள் மீதே நிலைத்திருக்கும்!பேரிண்பத்தில் மூழ்கியவனாய் அளவோடு சிற்றின்பத்திலும் கடவுளுக்கு நன்றி செலுத்தியவனாய் நுகர்வான்!!!